உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெருநாய் வழக்கால் உலகம் முழுதும் பிரபலமானேன்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு

தெருநாய் வழக்கால் உலகம் முழுதும் பிரபலமானேன்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: '' தெருநாய் குறித்து விசாரித்த வழக்கு தான் என்னை, உலகம் முழுவதும் சிவில் அமைப்புகள் மத்தியில் பிரபலம் ஆக்கியது,'' என சுப்ரீம் கோர்ட் நீதிபதி விக்ரம் நாத் கூறியுள்ளார்.தெருநாய்கள் கடிப்பதால் ரேபிஸ் பாதிப்பது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருக்களில் திரியும் நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=05mnzmhf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விக்ரம் நாத் சந்தீப் மேத்தா மற்றும் என்வி அஞ்சாரியா அமர்வு, முந்தைய தீர்ப்பில் மாற்றம் செய்தது. தெருநாய்களை பிடித்து தடுப்பூசி போட்டு , அந்த நாய்கள் பிடிக்கப்பட்ட இடத்திலேயே விட வேண்டும். ஆனால், ரேபிஸ் பாதித்த நாய்கள் மற்றும் ஆக்ரோசமாக திரியும் நாய்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என உத்தரவிட்டு இருந்தனர்.இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய சட்ட சேவை ஆணையத்தின் கூட்டத்தில் நீதிபதி விக்ரம் நாத் பேசியதாவது: நீண்ட காலமாக எனது வேலைக்காக சிறிய வட்டத்துக்குள்ளேயே அறியப்பட்டேன். இந்தியாவில் மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் உள்ள சிவில் அமைப்புகள் மத்தியில் தெருநாய் விவகாரம் தான் எனக்கு அங்கீகாரத்தை அளித்தது. இதனால், தெருநாய்களுக்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன். இந்த வழக்கை எனக்கு ஒதுக்கிய தலைமை நீதிபதி கவாய்க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாய் ஆர்வலர்கள் மட்டும் அல்லாமல், நாய்களும் என்னை வாழ்த்துவதாக எனக்கு செய்திகள் வருகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Durai Kuppusami
செப் 01, 2025 08:21

இதை சொல்வது வெட்கமாக இல்லை வாயால் உலகம் பூராவும் பிரபல்யம் ஆயிட்டாராம் இதை பார்த்து எங்களுக்கே மிகவும் வெட்கமாக இருக்கு இவர் எப்படி உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி ஆக....சொல்லவே இந்தியர்களுக்கே வெட்கமாக இருக்கு கடவுளே பாரதத்தின் மாண்பை காப்பாற்று.....


Venkatesan Srinivasan
ஆக 31, 2025 23:51

Great Country Great Judges Great Dogs. A judicial review applying reverse gear on the progress of the country. What the animal lovers society or civics bodies have control or responsibility over the dogs or the people in the midst of Dogs? The common man is left to the mercy of Dogs and Judges - disgust.


M Ramachandran
ஆக 31, 2025 23:41

இது ஏது நிறைய விடியல்கள் உற்பத்தியாகி கொண்டிருக்கு.


Balasubramanian
ஆக 31, 2025 21:11

இப்போது Trump கொண்டு வந்த வரி செல்லாது என்று அறிவித்த நீதிபதி பிரபலம் அதே போல ராகுல் ஐ நீர் இந்தியர் தானா என்று கேட்டவர் கூட பேசப்பட்டார்! பரபரப்பை எதிர் பாராமல் நீதியை நிலைநாட்ட முனைய வேண்டும் நீதிபதிகள் - எனபது தான் இவர் உரையின் உட்கருத்து


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 31, 2025 21:04

தெருநாய் கடிச்சு இவருக்கு ரேபிஸ் வந்திருந்தால் தெருநாய் கடித்த உச்சநீதி மன்ற நீதிபதி என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் பெயர் வந்திருக்கும்.இப்போது கூட அதை ட்ரை பண்ணலாமே


பிரேம்ஜி
செப் 01, 2025 07:51

சூப்பர்! இவர்களை நாய் கடிக்க வாய்ப்பில்லை! தெருவில் நடந்து இருந்தால்தான் நம் கஷ்டம் தெரியும்! இந்தியா பணக்காரர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழக்கூடிய சுதந்திர குடியரசு நாடு!


V Venkatachalam
ஆக 31, 2025 19:53

நான் நாய் தீர்ப்பு சொல்லிட்டேன். நாய்க்கும் தீர்ப்பு சொல்லிட்டேன்...இது வரை எந்த நீதிபதியும் இது மாதிரி தம்பட்டம் அடிச்சதில்லே.பிரமாணம் எடுத்து கொண்ட போது இதுக்கு விதி விலக்கு இருந்துதா?


Rajan A
ஆக 31, 2025 19:39

என்னே வழக்கு...வருங்காலங்களில் சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டி.


Sivagiri
ஆக 31, 2025 19:00

இந்தியாவில் இத்தனை கோடி தெருநாய்கள் இருக்குன்னு உலகம் தெரிஞ்சிக்கலாம் . . . அவைகள் சர்வ சுதந்திரமாக இருக்கின்றன என்பதையும் தெரிஞ்சிக்கலாம் . . .


அப்பாவி
ஆக 31, 2025 18:56

நாய்களுக்கு கிடைக்கற நீதி கூட மனுசங்களுக்கு கிடைக்கிறதில்லே. எதுக்கும் ஒரு ஓ போட்டு வைப்போம்.


சிட்டுக்குருவி
ஆக 31, 2025 18:42

இது முழுமையான தீர்ப்பு இல்லை .நாட்டில் ஜனத்தொகைக்கேற்ப வாகனங்களின் பெருக்கமவும் அதிகமாகிவிட்டது .நாய்கள் தெருக்களிலும் வாகனசாலைகளிலும் கண்டபடி ஓடி திரிவதால் ஆங்காங்கே நாய்கள் அடிபட்டு இறக்கின்றன .இறந்த நாய்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கும் ஆட்களில்லை .சாலைகளில் துர்நாற்றம் தான் மிஞ்சும் .நாய்களுக்கு பாதுகாப்பு இல்லங்களை அமைத்து பராமரிப்பது ,,ஆர்வாளர்கள் தத்தெடுப்பது ,பராமரிப்புக்கு பொதுமக்களின் பங்களிப்பை நாடுவதும் தான் சிறந்தது .நாய்களை தெருக்களில் விடுவதால் தினமும் அவைகளை பார்த்து உடல்நலம் அறிந்து மருத்துவம் பார்ப்பதும் ,தேவையான ஊசிமருந்துகளை அளிப்பதும் மிகவும் கடினம் .இந்தத்தீர்ப்பு பிரச்சனைக்கு தீர்வல்ல .தள்ளிப்போடப்பட்டுள்ளது .


முக்கிய வீடியோ