உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  மாஜிஸ்திரேட் துாக்கிட்டு தற்கொலை

 மாஜிஸ்திரேட் துாக்கிட்டு தற்கொலை

புதுடில்லி: டில்லியில் மாஜிஸ்திரேட் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டில்லி காகர்டூமா நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள, வடகிழக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய செயலராக பதவி வகித்தவர் அமன் குமார் சர்மா. கடந்த, 2018ம் ஆண்டு எல்.எல்.பி., பட்டம் பெற்ற சர்மா, 2021ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி டில்லி நீதித்துறையில் பணியில் சேர்ந்தார். பல குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளில் ஆஜரான சர்மா, மாஜிஸ்திரேட்டாகவும் பதவி வகித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி, வட கிழக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய செயலராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று தன் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், சர்மா உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !