உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கின்னஸ் புத்தகத்தில் மஹா கும்பமேளா.. புதிய சாதனைகள்!

கின்னஸ் புத்தகத்தில் மஹா கும்பமேளா.. புதிய சாதனைகள்!

மஹா கும்பமேளாவில் புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டு, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன. ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் 80 அடி நீளம், 5 அடி அகல துணியில் 10,000 பேர் பங்கேற்று கையால் வரைந்த ஓவியம்; 15,000 துாய்மை பணியாளர்கள் இணைந்து ஒரே நேரத்தில் விழா நடந்த இடத்தில் துாய்மை பணி மேற்கொண்டது உள்ளிட்ட புதிய சாதனைகள் கின்னஸ் அமைப்பால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டன. இதற்கான சான்றிதழை முதல்வரிடம் கின்னஸ் அமைப்பினர் வழங்கினர். இதற்கு முன் 10,000 பேர் ஒரே நேரத்தில் துாய்மை பணி மேற்கொண்டதே சாதனையாக இருந்தது.

66.21 கோடி பேர்!

நம்பிக்கை, ஒற்றுமை, சமத்துவத்தின் மிகப்பெரும் திருவிழாவான மஹா கும்பமேளா சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. இதில், 66.21 கோடி பேர் பங்கேற்று புனித நீராடினர். பிரதமர் மோடி தலைமையின் கீழ் நடந்த இந்தத் திருவிழா, உலக வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று; மறக்க முடியாத ஒன்று.- யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 28, 2025 11:29

ஹர ஹர மஹாதேவ் ..... சம்போ சிவ சம்போ .....


ராமகிருஷ்ணன்
பிப் 28, 2025 09:39

உ பி யில் இந்து விரோத கும்பல்கள் காங்கிரஸ், திமுக போன்ற கட்சியினர் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த மாதிரியான கும்பமேளா நடந்திருக்காது சாதனைகள் படைத்திருக்கும் முடியாது


Selvaraj Kpk
பிப் 28, 2025 09:10

இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் கலந்து கொண்ட சிறப்பான விழாவாக ஆகும் இது போன்ற நிகழ்ச்சி இனி உலகத்தில் எங்கும் நடைபெற வாய்ப்பு இல்லை வாழ்க பாரதம்


Selvaraj Kpk
பிப் 28, 2025 09:07

இந்தியாவின் மக்கள் தொகையில் 50%கலந்து கொண்ட விழா மிக சிறப்பானது. உலகத்திலே இது போன்ற விழா இனி நடக்க வாய்ப்பில்லை. வாழ்க பாரதம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை