வாசகர்கள் கருத்துகள் ( 16 )
தெருக்களில் 24 மணி நேரமும் நிறுத்தப்படும் கார்களுக்கு மாதாந்திர வரி விதிக்கலாம்.
கடனா கொடுக்கிறான் , கம்மி ஈ.எம்.ஐ அப்டிங்கறதுக்காக பந்தாவுக்கு காரை வாங்கி அதை ரோட்டிலே நிப்பாட்டறவங்க அநேகம்பேர் இருக்காங்க. நூறு ருபாய் போட்டு வாங்கின செருப்பைக்கூட வீட்டுல அதுக்குன்னு இருக்கும் ஒரு ஸெல்ப் ல் வைக்கறாங்க. பாவம் , லட்சக்கணக்குல போட்டு வாங்கி மழையிலையும், வெயிலேலேயும் , தூசிலயும் அனாதையா நிப்பாட்டறாங்க .காயவைக்கறாங்க. சின்ன சந்துக்குள்ள கூட காரை பார்க் பண்றங்க. ஒரு ஊரில் ராத்திரி பன்னெண்டு மணிக்கு மேல அல்லது ஒரு மணிக்கு மேல ரோட்டிலேயும் , சந்துக்களிலும் நிறுத்தப்பட்டு இருக்கும் ரெண்டு, மூணு , நாலு சக்கர வாகனங்களை கணக்கெடுத்தால் , அந்த ஊரு மக்கள்தொகையில் கால்வாசியாவது இருக்கும். அங்க ஒர்க் ஷாப் , பெட்ரோல் பம்ப் இருந்தால் கேட்கவே வேண்டாம். எங்கேயோ போகும் அடுத்த ஊர், அடுத்த மாநில வண்டிகளும் கூட சேர்ந்துகொண்டு இருக்கும். கல்யாணம், அரசியல் மீட்டிங் , ஊர்வலம், இப்படி ஏதாவது நடந்துவிட்டால், அய்யயோ , சொல்லவே வேண்டாம் டிராபிக் ஜாம் ஆகுறதுக்கு... இப்படி எல்லாமே காரணமாக இருக்கும் . எனவே இந்த மாதிரி சட்டம் கண்டிப்பாக வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யும் அளவுக்கு ரோட்டில் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களுக்கு சாதாரண அபராதத்தை விட பத்து மடங்கு அபராதம் விதிக்கவேண்டும்.
பணம் பத்தும் செய்யும். இந்த சட்டம் நடுத்தர ஏழை மக்களுக்கே. முதலில் பார்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே வணிக வளாகங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்
சிறிய தெருக்களில் கூட இருபக்கமும் கார்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோகளை நிறுத்தி தெருவின் மத்தியில் மூத்த குடிமக்களை நடக்க விடுகிறார்கள்.அவர்கள் மரண பயத்தில் தான் பயணிக்க வேண்டி உள்ளது .நிறுத்த படும் வாகனங்கள் உபயோக படுத்தமாடாமல், அழுக்கு அடைந்து துர்நாற்றம் வீசும் .அப்ப அப்ப மழைதான் சுத்தம் செய்யும் .கார்களை உபயோகிக்காத நிலையில் ஏன் லட்சங்களை போட்டு கார்கள் வாங்குகிர்கள் என்பது விடை கிடைக்காத கேள்வி
பேசாம இப்படி ஒரு உத்தரவு போடலாம். அந்த உத்தரவு கார் விற்பனை நிறுவனங்களுக்கு. அவர்கள் கார் வாங்க வருபவர்களிடம் உங்கள் வீட்டில் கார் பார்க்கிங் வசதி இருக்கா என்று கேட்டு, அப்படி இருந்தால் மட்டும் அவர்களுக்கு கார் விற்கவேண்டும்.
வாகன உற்பத்தியாளர்கள் லாபி மிகவும் வலிமையானது. அதுவும் தமிழகத்தில் அதிக தேர்தல் நிதி ஆட்டோமொபைல் துறை மூலமே திரட்டப்படுகிறது. அவர்கள் இதனை செயல்பட விடமாட்டார்கள். 30 சதவீத வாகனங்கள் பொது இடங்களில்தான் நிறுத்தப்படுகின்றன. அதுவும் டாக்சி ஆட்டோ, குட்டி யானை மினிலாரியெல்லாம் பொது இட பார்க்கிங்கை நம்பியே வாங்கப்படுகின்றன. (குடிசைகளில் குடியிருக்கும் ஆட்டோ டிரைவர்கள் வேறென்ன செய்வர்?). நடைமுறை சாத்தியமற்ற திட்டம்.
தமிழகத்திலும் இப்படி ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். சந்து பொந்துகளில் எல்லாம் காரை நிறுத்தி நடக்க கூட ம்முடியாமல் செய்கின்றனர். திருமண மண்டபங்களில் கூட வாகன நிறுத்த இடம் இல்லாது சாலைகளில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றனர்... இத்தகைய மண்டபங்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும்
நான் நெனச்சத்தையே சொல்லிட்டீங்க. இடம் இல்லாதவங்க கிட்ட மாதத்துக்கு ஒரு அமௌன்ட் வரி போட்டு வாங்கினா அரசாங்கத்துக்கு போகும்.. ஆனா அதையும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி ஆளுங்க கூட்டு சேர்ந்துக்கினு இவனுங்க வயித்துக்குள்ள போட்டுக்குவானுங்க. வயிறு அவ்வளவு பெருசு..
நல்ல திட்டம். நிறைய கார்கல் சாலையை அக்கிரமித்து நிறுத்த படுகிறது. ஸ்கூட்டர், மோட்டர் சைக்கிள் சாலையில் நிறுத்தும்போது பைன் விதிக்க படுகிறது அனால் கார் சாலையில் அக்கிரமித்து நிறுத்தும்போது பைன் விதிக்க படுவதில்லை அகவே பறப்பித்தமின்றி சாலையில் அக்கிரமித்து நிறுத்தும் கார்களுக்கு குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாய் அல்லது கார் பறிமுதல் செய்ய வேண்டும்
இங்கே தமிழ்நாட்டுக்கு வாங்கோ. கண்டவனும்.கார் வாங்கி தெருவிலேயே நுறுத்திக்கலாம். வீட்டில் கழிப்பறை இருக்குதோ இல்லியோ நாலு டூ வீலர் நிறுத்திக்கலாம். அபவும் இடமில்லையா? ரோடு ஓரமா இருக்கற டீக்கடை மேல் மோதி டீ குடிக்கும் நாலுபேரை இடிச்சித் தள்ளி பார்க்கிங் போட்டுரலாம்.
அங்குசம் வாங்க முடியாதவன் யானை வாங்கக்கூடாது சரிதானே. ரோட்டை ஆக்கிரமிக்க யாருக்கும் உரிமையில்லை.