மேலும் செய்திகள்
ஜீப் - பைக் மோதல்: உதவி பேராசிரியர் பலி
19-Mar-2025
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலம் கூனத்தறை என்ற பகுதியில் உள்ள கோவிலில் நேற்று திருவிழா நடந்தது. திருவிழாவை காண வந்த 15 வயதான இரண்டு சிறார்கள், வழியோரம் மயங்கி விழுந்து கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். தகவல் அறிந்து வந்த ஒற்றைப்பாலம் போலீசார், இருவரையும் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.போலீஸ் எஸ்.ஐ., சுனில் விசாரணையில், சிறார்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் மயங்கி விழுந்துள்ளது தெரியவந்தது. சிறார்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டி, 21, என்பவர், மது வாங்கி கொடுத்ததும் தெரிந்தது. இதையடுத்து, கிறிஸ்டியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
19-Mar-2025