உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹோட்டலில் கைவரிசை காட்டியவர் கைது

ஹோட்டலில் கைவரிசை காட்டியவர் கைது

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கண்ணாடி பகுதியில் உள்ள ஹோட்டலில், கடந்த 22ம் தேதி அதிகாலை திருட்டு நடந்தது. ஹோட்டலில் வைத்திருந்த, 36 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது.ஹோட்டல் உரிமையாளர் ஹமீத் அளித்த புகாரின் பேரில், பாலக்காடு டவுன் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ஆதம்கான் தலைமையிலான போலீசார், சி.சி.டி.வி., கேமரா பதிவு காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி நடத்திய விசாரணையில், பணத்தை திருடியது பல்வேறு திருட்டு வழக்குகளில் குற்றவாளியான மண்ணார்க்காடு புஞ்சக்கோடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 30, என்பது தெரிந்தது. இதையடுத்து, நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி