மேலும் செய்திகள்
லாரி - ஸ்கூட்டர் மோதிய விபத்தில் பெண் பலி
25-Feb-2025
பாலக்காடு; பாலக்காடு அருகே, சுத்தம் செய்வதற்காக கிணற்றில் இறங்கியவர், மூச்சுத்திணறி உயிரிழந்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் வாணியம்குளம் பகுதியைச்சேர்ந்தவர் ஹரி, 38. கூலித் தொழிலாளி. இவர் நேற்று காலை, அப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள, கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.கிணற்றுக்குள் விழுந்த மூடியை எடுக்க, கீழே இறங்கிய அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
25-Feb-2025