உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தான் கொலை செய்த மனைவி நேரில் வந்ததால் அதிர்ச்சியான நபர்

தான் கொலை செய்த மனைவி நேரில் வந்ததால் அதிர்ச்சியான நபர்

மைசூரு : கர்நாடகாவில், மனைவியை கொன்றதாக, ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தவர், ஜாமினில் வெளியே வந்தபோது, மனைவி உயிருடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கர்நாடக மாநிலம், மைசூரு குஷால் நகரின் பசவனஹள்ளியை சேர்ந்தவர்கள் சுரேஷ் - மல்லிகே தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகளாகின்றன. இரு குழந்தைகள் உள்ளனர். 2020ம் ஆண்டு நவம்பரில் திடீரென மல்லிகேயை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீசில் அவரது கணவர் புகார் செய்தார்.ஏழு மாதங்களுக்கு பின், பெட்டதபுரா பகுதியில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கிடைத்தது. அது மல்லிகே தான் என கூறும்படி போலீசார் சுரேஷை மிரட்டியுள்ளனர். மனைவியை கொன்றதாக மிரட்டி வாக்குமூலம் வாங்கி, அவரை சிறையில் அடைத்தனர்.மரபணு அறிக்கையில், கண்டுபிடிக்கப்பட்டது சுரேஷ் மனைவியின் எலும்புக்கூடு அல்ல என்பது தெரியவந்தது. ஆனாலும், சுரேஷ் ஐந்தாண்டுகள் சிறையில் இருந்தார். இதற்கிடையே சுரேஷுக்கு ஜாமின் கிடைத்தது. கடந்த ஏப்., 1ம் தேதி, நண்பர்களுடன் மடிகேரியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சுரேஷ், டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது தொலைவில் ஒரு பெண்ணை பார்த்தார்.தெரிந்த முகமாக தோன்றவே, அருகில் சென்று பார்த்தபோது, தன் மனைவி மல்லிகே என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார். போலீசார் விசாரித்த போது, தனது கள்ளக்காதலனுடன் விராஜ்பேட்டையில் உள்ள ஷெட்டிகெரேயில் ஐந்து ஆண்டுகளாக வசித்து வருவதாக மல்லிகே தெரிவித்தார். இதன்பின் அவரை மைசூரு ஐந்தாவது கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். 'இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் மல்லிகேவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்று போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சம்பவத்தால், ஒரு தவறும் செய்யாமல், சுரேஷ் நான்கரை ஆண்டுகள் சிறையில் இருந்தது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Shankar
ஏப் 10, 2025 09:08

சட்டம் எழுதியவர் இல்லை அந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி விசாரனை அதிகரித்தான் குற்றவாளி


Kannan
ஏப் 07, 2025 22:08

சட்டத்தை இயற்றியவன் மேதை அல்ல அவன் ஒரு முட்டாள் பிரிட்டிஸ் வெள்ளையனின் கைகூலி காவல்துறை மக்கள் விரோதியாக சட்டவிரோதியாக கேவலமாக செயல்படுது அரசு கோமாளிகள் வேடிக்கை பாக்குது நீதிமன்றம் நேரத்தை கடத்தி பணத்தை குவித்து ஏழைகளின் கடின உழைப்பில் வந்த பணத்தை பகட்டாக ஆநீதியாக வாழ்ந்து சுற்றி பணகுவியலை தீக்கிரையாக்குகின்றனர் இது ஜனநாயகமா


Nathi Magan
ஏப் 05, 2025 20:25

குற்றவியல் சட்டங்கள் மறு உருவாக்கம் செய்யப் படாத வரை அரைகுறை அரசுப் பணியாளர்களிடமும் கபட காவல் துறையிடமும் அவசர நீதிபதிகளிடமும் சிக்கி இந்த தேசம் அல்லல் படத்தான் வேண்டும்.


Prem
ஏப் 04, 2025 13:10

அவருக்கு நிதி நிவாரணம் தருவதே சரி


Padmasridharan
ஏப் 04, 2025 13:00

காவலர்கள் இப்படி மிரட்டிதான் குற்றவாளிகளை அதிகமாக்கி உள்ளனர். பின்னர் encounter என்ற பெயரில் சுடுகின்றனர். இதற்கு நடுவில் தங்கள் அறைக்கும் அழைத்து செல்கின்றனர். என்ன குற்றம் என்று பார்க்காமல் என்ன background என்று பார்த்து பணம் வாங்குதல், .... நடத்துகின்றனர்


N Sasikumar Yadhav
ஏப் 04, 2025 12:27

மரபணு சோதனை செய்து அறிக்கை கொடுத்த மருத்துவரை முதலில் வேலையை விட்டு தூக்கவேண்டும் காவல்துறையினர் சொன்னால் காவல்துறையினர் சொல்வதை மாதிரி அறிக்கை கொடுக்கிறார்கள் அரசுத்துறை பிணியாளர்கள் அனைவரும் கூட்டு களவானிகள்தானோ என்னவோ


Mecca Shivan
ஏப் 04, 2025 12:11

காவல்துறையும் நீதித்துறையும் துருப்பிடித்து புரையோடி விட்டது.. இந்த வழக்கில் இப்போது பாதுகாப்பு பெறவேண்டியது சுரேஷ். அதேபோல மாநில அரசு சுரேஷுக்கு பெரிய தொகையை நஷ்டஈடாக வழங்க ஆணையிட நீதிமன்றம் பாதிமன்றமாகிப் போனது .. இவர்கள்தான் பின்னாளில் உயர் மற்றும் உச்சத்தில் அமர்ந்து பரிபாலனம் செய்வார்கள் என்பது மக்களின் கெட்ட நேரம்


sridhar
ஏப் 04, 2025 11:10

This is how police extract confessions from people without political support to solve cases quickly. Pandiyammaal murder case is a well known one in the annals of Madurai police. It is similar to this.


M Ramachandran
ஏப் 04, 2025 11:02

குற்றம் கொலை செய்து விட்டு செய்தவர்கள் அரசில் செல்வாக்குடன் பணபலத்துடன் நிம்மதியாக காலம் கழிக்க இது போனற அப்பாவிகள் போலீஸாரால் குற்றம் செய்தவரை பிடிக்க முடியாமால் அல்லலுர செல்வாகுள்ளவர்கள் வேறு ஒரு அப்பாவியை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து தண்டனையை வாங்கி கொடுத்து நிம்மதியாக இருக்கின்றனர்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 04, 2025 10:08

இதில் புதுமை இல்லை. இந்தியாவில் பல கொலை வழக்குகளில் சிக்கி சிறைக்குள் அகப்பட்டவர்களில் பலர் இந்த ரகம்தான். குற்றவாளியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக தனக்கு ஆகாதவர்களை பலியிடுவது காவல்துறையின் கை வந்த கலை. அதற்கு நீதியரசர்களும் துணை போவது இந்தியாவின் சாபக்கேடு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை