உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மார்க் -1ஏ இலகு ரக போர் விமானங்கள் விரைவில் வினியோகம் துவக்கம்

மார்க் -1ஏ இலகு ரக போர் விமானங்கள் விரைவில் வினியோகம் துவக்கம்

பெங்களூரு: 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' நிறுவனம் தயாரிக்கும், 'மார்க் -1ஏ' இலகு ரக போர் விமானங்களை, இந்தாண்டு இறுதிக்குள் நம் விமானப்படைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நம் விமானப்படையில் இலகு ரக போர் விமானங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், 'மார்க்- 1ஏ' இலகு ரக போர் விமானங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. விமானப்படை சார்பில் 180 விமானங்களுக்கு, 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' உடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 1.10 லட்சம் கோடி ரூபாய். இதில் 83 விமானங்களுக்கான முதல் ஒப்பந்தம் 2021 பிப்ரவரியிலும், 97 விமானங்களுக்கான இரண்டாவது ஒப்பந்தம் 2025 செப்டம்பரிலும் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் 10 விமானங்களை விமானப்படைக்கு வழங்க, 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் முதல் விமானங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அமெரிக்காவின் ஜி.இ., நிறுவனத்திடம் இருந்து இன்ஜின்கள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் முக்கிய சான்றிதழ்களை பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளன. 'இன்ஜின் வினியோகம் தடையின்றி கிடைத்தால், முதல் ஒப்பந்தப்படி 83 விமானங்களை மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் வழங்க முடியும்' என, 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' தெரிவித்துள்ளது. இதற்கிடையே, மேம்படுத்தப்பட்ட, 'மார்க் -2' இலகு ரக போர் விமானத்துக்கான பணிகளும் நடந்து வருகின்றன. அதன் கட்டமைப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், 2027 மார்ச்சில் முதல் தரைச் சோதனையும், அதே ஆண்டில் முதல் விமானச் சோதனையும் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Yazhini Muruganantham
செப் 19, 2026 19:37

என்ஞின் தயாரிக்கும் புராஜெக்ட்டை இஸ்ரோவிடம் வழங்குங்கள்..


Tetra
செப் 21, 2026 22:13

ராக்கெட் தொழில் நுட்பம் வேறு விமான என்ஜின் தொழில் நுட்பம் வேறு நுட்பம் வேறு. இஸ்ரோ வால் தயாரிக்க முடியாது


Sridhar Venkadesan
செப் 19, 2026 15:44

நல்லதை பாராட்டுவோம் வரவேற்போம்


Barakat Ali
செப் 19, 2026 14:11

நம்மால் என்ஜினைத் தயாரிக்க முடியலை .... இன்னிலை மாறணும் ....


Thirumal Kumaresan
செப் 19, 2026 09:43

ஏன் என்ஜினை நம்ம தயாரிக்க வில்லை


Appan
செப் 19, 2026 08:22

DRDO வின் GTRE , புதிய தலைமுறை என்ஜினுக்கு R&D செய்கிறது. இந்திய அமெரிக்காவின் GE என்ஜின் வாங்கி புதிய தலைமுறை போர் விமானங்களை உற்பத்தி பண்ணி இந்திய விமானப்படைக்கு கொடுக்கிறது. இந்திய அமெரிக்காவை சார்ந்து ஏதும் செய்ய சரியாக செய்ய முடியாது. அமெரிக்க என்ற நாடு அதன் நலம் தான் முக்கியம். பிற நாடுகள் அவர்கள் சொல்வதை கேட்கணும். இப்படி பட்ட நாட்டுடன் எப்படி வியாபாரம் செய்ய முடியும் .?. மாற்றாக ரஷியா இந்தியாவுடன் எப்போது நண்பனாக உள்ளது. இந்திய ரஷிய கூட்டு முயற்சியால் BHRAMOUSE ஏவுகணைகள் செய்து உலகில் முன்னணியில் உள்ளது. இது போல் இந்திய அமெரிக்காவை விட்டு ரஷிய உடன் சேர்ந்து R&D செய்யலாம். இப்போ DRDO வுக்கு அப்துல் கலாம் போன்ற ஒரு தலைமை தேவை.


raja
செப் 19, 2026 06:15

விமான என்ஜின் களை இந்தியாவிலேயே தயாரிக்க முடியும்....டாட்டா மற்றும் அசோக் லேலண்ட் என்ஜின் ல் சிறிது மாற்றி அமைத்தால் சிறிய விமானங்களுக்கு என்ஜின் நமக்கு நாமே தயாரிக்கலாம்....கமிசன் ஊழல் இவற்றை விட்டிருக்க வேண்டும்...


Columbus
செப் 19, 2026 13:30

Mfg aircraft engines is a highly complicated process. We do not have expertise in this. Hence we are required to import these from USA, Russia or Europe.


raja
செப் 19, 2026 18:55

நண்பா இப்படி நினைத்து இருந்தால் சந்திரனுக்கு சந்திராயை அனுப்பி இருக்க முடியாது நூற்று கணக்கில் சாதலிட்டுகளை ஒரே ராக்கெட்டில் இவி இருக்க முடியாது ஹைட்ரஜன் என்ஜினை கண்டு பிடித்து இரயில் ஓட்டி இருக்க முடியாது.இந்தியாவில்....சிறிய ரக விமானங்களும் என்ஜின் ரேடியல் என்ஜின் டைப் தான் .. இந்திய விங்யானிகளால் முடியும்...


Aarbinms
செப் 19, 2026 05:42

விமானத்தின் உயிர் நாடியே அதன் இன்ஜின்தானே. ஹெஜ் ஏ எல் ஏன் அதனை தானே தயாரிக்காமல் வேறு கம்பெனியிடம் எதிர்பார்க்கிறது. உங்க ஈகோவை ஒழித்து இஸ்ரோவை அணுகுங்கள். உள் நாட்டில் தயாரிக்காமல் ஏன் வெளிநாட்டில் கை ஏந்துகிறீர்கள்?


Tetra
செப் 21, 2026 22:16

எச் ஏ எல் ஒரு திறனற்ற ஊதாரி நிறுவனம். விமான பாகங்களை ஒழுங்காக சரியாக சேர்க்கக்கூட தெரியாத ஒரு உதவாக்கரை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை