உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பங்குச் சந்தைகள் சரிவு; முதலீட்டாளர்களுக்கு 19.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு

பங்குச் சந்தைகள் சரிவு; முதலீட்டாளர்களுக்கு 19.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த வரிவிதிப்பு காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு 19.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். இந்தியாவுக்கு 26 சதவீதம் வரி விதித்துள்ளார். அதிபர் டிரம்ப் அறிவித்த வரிவிதிப்பு காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1toiohx3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று இந்தியப் பங்குச் சந்தை, 2600 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் துவங்கியது. இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி கடந்த வார வர்த்தகத்தில் 22,904.45 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று (ஏப்ரல் 07) காலை 800 புள்ளிகளில் சரிந்து, 22,075 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.பல்வேறு துறைகளில் விற்பனை காரணமாக இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் பலவீனமான நிலையில் முடிவடைந்தன. நிப்டி 22,200 க்கும் கீழே இருந்தது. முடிவில், சென்செக்ஸ் 2,226.79 புள்ளிகள் அல்லது 2.95 சதவீதம் குறைந்து 73,137.90 ஆகவும், நிப்டி 742.85 புள்ளிகள் அல்லது 3.24 சதவீதம் குறைந்து 22,161.60 ஆகவும் இருந்தது.முதலீட்டாளர்களுக்கு 19.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Columbus
ஏப் 07, 2025 12:28

Not Rs 7.00 lakh Cr. but Rs 19.00 lakh Cr. loss


Velan Iyengaar
ஏப் 07, 2025 12:19

இதுக்கு சர்வநிச்சயமாக நேரு காரணம் இல்லை என்று???


THOMAS LEO
ஏப் 07, 2025 12:06

All rich people invest share market. So there is no HARM. Poor people No Money... No Share.... BE COOL


அப்பாவி
ஏப் 07, 2025 11:23

இந்தியாவுக்கு பெரிய பாதிப்பில்லை.


Ray
ஏப் 07, 2025 11:52

சரியா சொன்னீங்க பங்கு சந்தையில் QUICK MONEY அள்ளத்துடிக்கும் அப்பாவிகளுக்குத்தான் சில லக்ஷம் இழப்பாம். இந்திய பொருளாதாரம் அசுரர் வளர்ச்சின்னு சொல்றதை நிறுத்த மாட்டாங்க.


ஆரூர் ரங்
ஏப் 07, 2025 10:55

உலகம் முழுவதிலும் இறக்கம். ஏற்ற இயக்கங்களுக்கு அஞ்சாதவர்களுக்கு மட்டுமே சந்தை சரிப்பட்டு வரும்.


Rajendran Chockalingam
ஏப் 07, 2025 10:49

If ₹10/= value FV share, they bought at ₹1000/= book value₹100/=.why you bought higer value. If you over rated, that shsre come down. No, problem


Barakat Ali
ஏப் 07, 2025 11:48

To whom you are complaining ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை