உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உலா வரும் மசூத் அசார்: கண்டறிந்த உளவுத்துறை

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உலா வரும் மசூத் அசார்: கண்டறிந்த உளவுத்துறை

புதுடில்லி: பயங்கரவாதி மசூத் அசார் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடமாடி வருவதை உளவுத்துறை கண்டறிந்து உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.அமெரிக்கா மற்றும் ஐ.நா., சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவன் மசூத் அசார். ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான இவன், 2016ம் ஆண்டு பதான்கோட் விமானப்படை தளம் தாக்குதல், 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hdnvmt31&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பஹல்காம் சம்பவத்தை அடுத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்கள் அழித்தொழிக்கப்பட்டன. இந்த தாக்குதலின் போது மசூத் அசாரின் குடும்பம் கொல்லப்பட்டது. ஆனால் தாக்குதலில் இருந்து அவன் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவன் எங்கிருக்கிறான் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந் நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அவனது நடமாட்டம் இருப்பதை உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பஹாவல்பூரில் இருந்து 1000 கி.மீ., தொலைவில் உள்ள கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் தென்பட்டுள்ளான் என்றும் அந்த தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.அதேபோல, ஸ்கர்டு பகுதியிலும் அவனது நடமாட்டம் இருப்பதை உளவுத்துறை கண்டறிந்துள்ளது. இந்த ஸ்கர்டு பகுதி என்பது, கில்ஜித்-பல்திஸ்தான் பகுதிக்கு உட்பட்ட ஒரு நகரமாகும். இங்கு 2 மசூதிகள், அரசு மற்றும் தனியார் ஓய்வு விடுதிகள் அதிகம் உள்ளன.அண்மையில், பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரி, மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் தான் ஒளிந்து கொண்டிருப்பான். பாகிஸ்தான் மண்ணில் அவன் இருந்தால்,உடனடியாக பிடித்து இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்று கூறி இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

M Ramachandran
ஜூலை 19, 2025 00:51

பாம்பை கருடன் கவ்வுவதை போல் தூக்கி கொண்டு போய் விடுவார்கள் கொத்து கொதுன்னு கொத்தி ஜீரணம் ஆகி விடும்.


Iyer
ஜூலை 18, 2025 23:00

பல அப்பாவிகளை கொன்று குவித்த இவன் - மரணம் இன்றா நாளையோ - பாரதநாடு வீரர்களால் எப்போது சுடப்படுவோம் என்று தினமும் பயந்து பயந்து செத்துக்கொண்டிருப்பான்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 18, 2025 22:09

தெரிஞ்சிருச்சுல்ல ? போட்ருக்கலாம்ல ?


subramanian
ஜூலை 18, 2025 21:39

அவன் இருக்கும் இடம் இந்தியா ஆப்கனிஸ்தான் பாகிஸ்தான் எல்லை பகுதி, மூன்று நாடுகளின் சங்கமம் இடம், இது இந்தியாவுக்கு சொந்தம், ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ளது. அவனுக்கு பாதுகாப்பான இடம். அவனை பிடித்து இந்தியா கொண்டு வந்தால் பல உண்மைகளை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது.


Ganesun Iyer
ஜூலை 18, 2025 20:56

அப்ப ஒரு வெள்ளிக்கிழமை சம்பவம் இருக்கு..


ديفيد رافائيل
ஜூலை 18, 2025 20:04

போர் பாதியிலே நிறுத்துனா இப்படி தான்


Iyer
ஜூலை 18, 2025 19:24

இன்னும் சில வாரங்களில் மசூத் அஸர் - அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுடப்பட்டு மரணம் அடைந்த செய்தி தலைப்பு செய்திகளாகும்


Amsi Ramesh
ஜூலை 18, 2025 19:09

தட்டி தூக்குங்க ஆஃபீசர்


spr
ஜூலை 18, 2025 18:21

மசூத் அசார் அநேகமாக இந்தியாவிலேயே தான் ஒளிந்து கொண்டிருப்பான். பாகிஸ்தான் மண்ணில் அவன் இருந்தால்,உடனடியாக பிடித்து இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்று பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரி, சொல்லியிருந்தால் கூட வியப்பில்லை ஏனெனில் அனைத்து பயங்கரவாதிகளுக்கும் ஆதரவு தரும் ஒரு கூட்டம் இங்கே இன்னமும் இருக்கிறது வாக்கு வங்கிக்காக அவர்களைக் காப்பாற்றும் அரசுகளும் ஆட்சியில் இருக்கிறது. இந்த நாட்டில் குற்றம் செய்தவருக்கு தண்டனை இல்லை என்பதோடு பிற நாட்டில் கொலை செய்தாலும் அவர்களையும் சிறுபான்மையினர் என்பதால் காக்கத் துடிக்கும் அரசு இருக்கிறது


என்றும் இந்தியன்
ஜூலை 18, 2025 17:29

உலாவரும் மசூத் அசார் என்று தெரியும் என்றால் அங்கேயே அவனை சுடவேண்டியது தானே