உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 34 பேர் காயம்

பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 34 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.பஞ்சாபின் ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8f972epm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 மேலும் 34 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வெடி விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. விபத்தில் இரண்டு மாடி கட்டடம் இடிந்து தரமட்டமாகியது.இறந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்கள் உத்தரபிரதேசம் மற்றும் பீஹாரில் இருந்து குடியேறியவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
மே 30, 2025 12:28

பட்டாசு வெடித்ததா? அல்லது பக்கத்தில் உள்ள பாக்கிஸ்தான்காரன் குண்டு போட்டானா என்று விசாரிக்கவும்.


சுக்தேவ்
மே 30, 2025 11:12

உ.பி ல பாலும் தேனும் ஒடி அந்த வெள்ளம் தாங்காம தொழிலாளர்கள் பஞ்சாப், தமிழ்நாடு, கேரளான்னு ஓடிடறாங்க.


அப்பாவி
மே 30, 2025 11:10

பஞ்சப் சிந்து குஜராட்ட மராட்டா எங்கும் திராவிட மாடல் தாண்டா...


Nada Rajan
மே 30, 2025 11:06

குண்டு வெடித்து இருக்கா என போலீசார் விசாரணை நடத்த வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை