உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் சமஸ்டிப்பூர் - சஹர்சா ரயிலில் பயங்கர தீவிபத்து; பயணிகள் பீதி

பீஹாரில் சமஸ்டிப்பூர் - சஹர்சா ரயிலில் பயங்கர தீவிபத்து; பயணிகள் பீதி

சஹர்சா: பீஹாரில் சமஸ்டிப்பூர் - சஹர்சா பயணிகள் ரயிலில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.சஹர்ஷா மாவட்டம் சிம்ரி பக்தியார்பூர் ரயில்நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் நின்று கொண்டிருந்த சமஸ்டிப்பூர் - சஹர்சா பயணிகள் ரயிலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இன்ஜின் மற்றும் அதனையொட்டியுள்ள பெட்டியில் பரவி இந்தத் தீ, மளமளவென கொளுந்து விட்டு எரியத் துவங்கியது. கரும்புகை மற்றும் தீ வெளியேறுவதைக் கண்ட பயணிகள், அலறியடித்துக் கொண்டு ரயிலில் இருந்து வெளியேறினர். இதனால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. பின்னர், உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில், 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், ரயிலில் பற்றி எரிந்த தீயை, 3 மணிநேரமாக போராடி அணைத்தனர். ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், மின்கசிவால் தீப்பற்றி எரிந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஆக 03, 2026 14:35

வயிறு பத்தி எரியுது


V Venkatachalam, Chennai-87
ஆக 03, 2026 09:42

விஷமிகள் வேலையா என்பதை கண்டறிய வேண்டும். கரப்பான் பூச்சிங்க அவன்களுக்கு முட்டு குடுக்குற கயவன்கள் வேலையா இருக்கும் ங்குற சந்தேகம் இருக்கு. கப்பிலு சிப்பலு1 கோடி குடுத்தது எதுக்குன்னு மர்மமாகவே இருக்கு. மத்திய அரசு ரொம்ப கவனமா இருக்கணும். பயணிகளுக்கு ஆபத்து இல்லை ங்குறது ஆறுதலான விஷயம்..


Tamilan
ஆக 03, 2026 09:40

பல லச்சக்கணக்கான் கோடிகள் கொட்டியும் ரயில் பராமரிப்பு பாதுகாப்பு உபகரணங்கள் படு கேவலமாக உள்ளன


V Venkatachalam, Chennai-87
ஆக 03, 2026 20:20

டமிலன் கத்துவது தான் படு கேவலமா இருக்கு இந்திய ரயில்கள் அப்புடி தான் இருக்கும். நீ ரயில்ல போகாதே. நடந்து போ. சும்மா போகாதே. கத்திகிட்டே போ. இல்லாகட்டி பாகிஸ்தானுக்கு போயிடு. அதை விட விஷேசம்., சீனாவுக்கு போயிடு.


Mohan
ஆக 03, 2026 09:37

அடிக்கடி தீ பிடிக்குது எனெக்கென்னவோ சதி இருக்குற மாதிரி தெரியுது ..ஒவ்வொரு என்ஜினும் சுமார் 125 கோடி ரூபாய் ...வந்தே பாரத் என்ஜின் 200 கோடி ...அசால்ட்டா எடுத்துக்காதீங்க தீர விசாரிங்க


V Venkatachalam, Chennai-87
ஆக 03, 2026 14:53

இது தவறான தகவல் ன்னு நினைக்கிறேன். ரயில் இன்ஜின் காஸ்ட் 12.5 கோடி முதல் 31 கோடி வரை, ஹார்ஸ் பவர் பொறுத்து மாறுபடும். இப்போது ஓடிக்கொண்டிருக்கும் வந்தே பாரத் ரயில் 10 பெட்டிகளும் சேர்த்து சுமார் 175 கோடி ரூபாய் . ரயில்வேஸ் இந்த விபத்தை பத்தி கண்டிப்பா விசாரிக்கும். விசாரணை அறிக்கை வருவதற்குள் நாம் இதை மறந்து போய்விடுவோம்.


புதிய வீடியோ