உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாய், கட்டில், தலையணை, சலவை, கழிப்பறை... சிறையில் சோக்சிக்கு அடிக்கப்போகுது லக்!

பாய், கட்டில், தலையணை, சலவை, கழிப்பறை... சிறையில் சோக்சிக்கு அடிக்கப்போகுது லக்!

மும்பை : பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள வைர வியாபாரி மெஹுல் சோக்சி, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், சிறையில் அவருக்கு என்ன மாதிரியான வசதிகள் செய்து தரப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13,500 கோடி ரூபாய் கடன் பெற்ற வைர வியாபாரி மெஹுல் சோக்சி, வெளிநாடு தப்பிச் சென்றார்.

கடிதம்

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் பதுங்கி இருந்த அவரை, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டு அரசு கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தது. அவர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சோக்சி அடைக்கப்படவுள்ள சிறையில் அவருக்கு செய்யப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து பெல்ஜியம் அரசுக்கும், அந்நாட்டின் நீதித்துறைக்கும் கடிதம் மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் சில வாக்குறுதிகளை அளித்துள்ளது.

அதன் விபரம்:

மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில், அறை எண் - 12 சோக்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வங்கி கடன் மோசடி வழக்கில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால், தண்டனை காலம் முடியும் வரை, அறை எண் 12லேயே அவர் அடைக்கப்படுவார். இதற்காக அந்த அறையில், 3 சதுர மீட்டர் அளவுக்கு தனிப்பட்ட இடவசதி செய்யப்பட்டுள்ளது. அறையில் அவருக்கு மென்மையான பருத்தி பாய், தலையணை, போர்வை வழங்கப்படும். மருத்துவ காரணங்களுக்காக மர கட்டிலோ அல்லது உலோக கட்டிலோ வழங்கப்படும். போதிய காற்றோட்டத்துடன், வெளிச்சம் இருக்கும் வகையில் அந்த அறையில் வசதி செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட தனிப்பட்ட பொருட்களை வைத்துக் கொள்வதற்கான வசதியும் அந்த அறையில் இருக்கிறது.

அனுமதி

ஒவ்வொரு நாளும் மெஹுல் சோக்சிக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படும். 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் போதிய மருத்துவ வசதிகள் தரப்படும். துணிகளை சலவை செய்வதற்கும், இயற்கை உபாதைகளுக்கு கழிப்பறை வசதிகளும் செய்து தரப்படும். வெளிப்புறத்தில் தினசரி உடற்பயிற்சி செய்வதற்கு அனுமதிக்கப்படும். பேட்மின்டன், கேரம் உள்ளிட்டவை விளையாடவும் அனுமதி தரப்படும். அங்கு நடத்தப்படும் யோகா, தியான பயிற்சி வகுப்புகளையும் மெஹூல் பயன்படுத்தலாம். நுாலகத்தையும் கைதிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறைக்குள், 20 படுக்கை வசதியுடன் ஐ.சி.யு., சிகிச்சைக்கான பிரிவும் இயங்குகிறது. மருத்துவ அவசரம் எனில், 3 கி.மீ., தொலைவில் உள்ள ஜே.ஜே.குரூப் ஆப் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறலாம். தேவைப்பட்டால், தன் சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தும் அவர் சிகிச்சை பெறலாம். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

crap
செப் 09, 2025 11:05

மும்பை தாஜ் ஹோட்டலில் எஸ்சிகியூட்டிவ் சூட் புக் செய்யப்படும் - என்று ஒரு வரியில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கலாம்.


Barakat Ali
செப் 09, 2025 10:46

ஒண்ணே ஒண்ணுதான் பாக்கி....


Artist
செப் 09, 2025 13:47

நீங்க கம்பெனி கொடுக்கலாம்


R.RAMACHANDRAN
செப் 09, 2025 08:56

லஞ்ச ஊழல் பேர்வழிகள் குற்றவாளிகளை அயல் நாடுகளுக்கு தப்பிச்செல்ல உதவி செய்துவிட்டு இப்போது பாசாங்கு செய்கின்றனர்.


srinivasan varadharajan
செப் 09, 2025 08:31

பாருக்குள்ளே நல்ல நாடு. பசிக்கு ரொட்டி திருடுபவனை அடித்து கொல்வதும் கோடிகளை திருடுபவனை கொண்டாடுவதும் என்ன ஒரு கொடுமை.


மாலுமி
செப் 09, 2025 06:59

இந்த கூத்துக்கு அவரை எதற்கு சிறையில் அடைக்க வேண்டும்? நமது நாட்டில் தண்டனை கூட பணம் இருப்பவனுக்கும், இல்லாதவனுக்கும் வெவ்வேறாக உள்ளது.


Iyer
செப் 09, 2025 05:46

மெஹுல் சோக்சி, விஜய் மல்லயா போன்ற திருடர்கள் - பாரதத்திற்கு ஒப்படைக்கப்பட்டால் - இங்கு பல காங்கிரெஸ்க்காரர்களின் கூட்டு வெளிப்படும். பலஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க மன்மோகன், பப்பு போன்றவர்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது வெளியாகிவருகிறது.


Raj
செப் 09, 2025 05:43

எத்தனை வருடங்களாக இந்த case நடந்து கொண்டிருக்கிறது, இன்னும் நாடு கடத்த படவில்லை, இப்பொழுதும் “குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால்” என்ற கேள்வி தான் போய்க்கொண்டிருக்கிறது. கேவலம்.


rama adhavan
செப் 09, 2025 05:35

அய்யா இவர் மிக யோகக்கார கைதி.


Indhiyan
செப் 09, 2025 04:08

ஆயிரம் ரூபாய் திருடியவனுக்கு கடும் சிறை,அடி. ஆயிரம் கோடி திருடியவனுக்கு வசதி திருவள்ளுவர் பணம் படைத்தவனுக்கும் ஏழைக்கும் தர்மம் ஒரே மாதிரி இருக்காது என்று அன்றே சொன்னார். அறத்துஆறு இதுவென வேண்டா ம் சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை அறத்தின்வழி இதுதான் என பல்லக்கில்[சிவிகை] உட்கார்ந்து இருப்பவனிடமும் பல்லக்கை தூக்கும் வேலையாட்களிடமும் சொல்லவேண்டாம். ஏனென்றால் இருவருக்கும் ஒரே வழி இல்லை.


Singaravadivelan
செப் 09, 2025 06:37

I endorse the above view . There is no disparity between two thieves.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை