உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி

மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களில், முறைகேடு புகாரில் சிக்காதவர் டிசம்பர் மாதம் வரை பணியில் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கான 24,640 பணியிடங்களை நிரப்ப, 2016ல் மாநில அரசு தேர்வு நடத்தியது. 23 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதினர்; 25,753 பேருக்கு பணி ஆணைகள் அனுப்பப்பட்டன.இந்த தேர்வு நடைமுறையில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.வழக்கை விசாரித்த கோல்கட்டா உயர் நீதிமன்றம், 25,753 ஆசிரியர்கள் மற்றும் இதர கல்வி பணியாளர்கள் பணி நியமனத்தை ரத்து செய்தது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேற்கு வங்க அரசு பள்ளிகளுக்கான, 25,753 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவதாலும், ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைக்கு அதிக காலம் ஆவதாலும் மாணவ- மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும். இதனால் இந்த வருடம் இறுதி வரை தொடர்ந்து பணியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சய் கன்னா, சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பணி நீக்கப்பட்ட ஆசிரியர்கள் டிசம்பர் 31ம் தேதி வரை பணியாற்ற அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாணவர்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும், புதிய ஆசிரியர் தேர்வுக்கான நடைமுறையை மே 31ம் தேதிக்குள் தொடங்கி, டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. திரிணமுல் காங்கிரஸ் வரவேற்பு இந்த தீர்ப்பை திரிணமுல் காங்கிரஸ் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை டிசம்பர் மாதம் வரை பணியில் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். மக்களின் எதிர்காலத்தை சீர்குலைப்பதற்கான பா.ஜ., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் சதிகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Barakat Ali
ஏப் 18, 2025 12:40

போட்ட காசை எடுக்க உச்சம் உதவியிருக்கு... உச்சத்துக்கு ரொம்பவே இளகிய மனசு... இதை வெச்சே அவனவன் முன்னுதாரணம் காட்டுவான் ....


ராஜ்குமார்
ஏப் 18, 2025 11:04

நீதி மன்றம் சட்டம் அடிப்படையில் ஒரு தீர்ப்பு அளித்தது ஆனால் இன்று மனிதாப அடிப்படையில் தீர்ப்பை சற்றே மாற்றி உள்ளது. எனக்கு தெரிந்து ஜனாதிபதி இல்லை ஆளுநருக்கு அந்த அதிகாரம் இருக்கவேண்டுமே தவிர நீதி மன்றம் அரசுக்கு மேல் செயல் பட கூடாது.


GMM
ஏப் 17, 2025 21:26

25,753 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றம் சரியோ, தவறோ உறுதி செய்த பின் மேல் முறையீடு மூலம் நிர்வாகத்தில் நீதிபதி தலையிட முடியாது. உச்ச மன்றம் மேல் இதனை ஜனாதிபதி மட்டும் தான் ரெகுலரைஸ் செய்ய முடியும். இது கருணை மனு போன்றது. இது போன்ற சட்ட, நிர்வாக விரோத முறையை அனுமதித்தால், நீதிமன்றம் நிர்வாக ஒழுங்கை சிதைத்து விடும். அரசியல் சாசனம் சிதைக்கப்பட்டு வருகிறது.


sankaranarayanan
ஏப் 17, 2025 21:15

இது என்ன வியப்பாகவே உள்ளது முதலில் பணி நீக்கம் என்ற ஆணை பிறகு டிசம்பர் வரை பணி தொடரும் என்று மற்றொரு ஆணை .இது முன்னுக்குப்பின் முரண்பாடாகவே உள்ளது இனி இதுபோன்ற ஆணைகளை மக்கள் நம்பவே மாட்டார்கள் இதனால் அங்கே ஊழல்கள் இன்னும் அதிகரிகப்போகுமே தவிர குறைவதற்கு சந்தர்ப்பமே இல்லை .


Ramesh Sargam
ஏப் 17, 2025 21:09

மம்தாவின் ஆட்சியே முறைகேடான ஆட்சிதான்.


Bhakt
ஏப் 17, 2025 19:49

ரிட்டையர் ஆனதும் ரா பயன்படுத்தி பெருசா ஆப்பு வைக்கணும்.


ஆரூர் ரங்
ஏப் 17, 2025 18:32

தகுதியற்ற போலி ஆசிரியர்கள் டிசம்பர்வரை மாணவர்களின் நலனை பாதுகாப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை