உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அருணாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

அருணாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

இட்டாநகர்; அருணாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.லாங்டிங் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பொங்சாவ் என்ற பகுதியில் சந்தேக நபர்களின் நடமாட்டம் இருப்பதாக ஊகித்தனர்.இதையடுத்து, அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று நடமாடி வருவதை கண்டறிந்தனர். பாதுகாப்பு படையினர் வந்ததை அறிந்த அந்த கும்பல் திடீரென துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். சிறிது நேர துப்பாக்சிச் சண்டைக்கு பின்னர் பயங்கரவாதிகள் எல்லை பகுதியின் வழியாக மியான்மருக்குச் தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து அருணாச்சலபிரதேசம், மியான்மர் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூன் 07, 2025 12:36

இந்த பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தவர்கள்? உள்நாட்டு பயங்கரவாதிகளா, அல்லது எதிரிநாட்டு பயங்கரவாதிகளா? யாரா இருந்தால் நமக்கென்ன. போட்டுத்தள்ளுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை