|  ADDED : மே 24, 2025 01:29 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
புதுடில்லி: ''பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்த நேரங்களில் கூட, ஐரோப்பிய நாடுகள், 'முக்கிய கூட்டாளி' என்ற அந்தஸ்தை பாகிஸ்தானுக்கு வழங்கின. ''இதுதான் ஐரோப்பிய நாடுகளின் ஜனநாயகமா?'' என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yqpwa8ym&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து, உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், ஜெய்சங்கர் நெதர்லாந்து, டென்மார்க் சென்றார். இப்போது அவர், ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டின் பத்திரிகை ஒன்றுக்கு அமைச்சர் ஜெய்சங்கர்  அளித்த பேட்டி:இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து 80 ஆண்டுகளாக அந்நாட்டின்  அட்டூழியங்களை சகித்தே வந்துள்ளோம்.பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்த நேரங்களில் கூட, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், தங்களின் மிக நெருங்கிய கூட்டாளி நாடு என்ற அந்தஸ்தை பாகிஸ்தானுக்கு வழங்கின.இதை பார்க்கும் போது, ஐரோப்பிய நாடுகளின் உண்மையான கொள்கை என்ன; ஜனநாயக நாடுகள் என கூறிக் கொள்வதன் அர்த்தம் என்ன என்ற கேள்வி எழுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.