உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் தொடர்பான உண்மை தகவல்: பொது மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வேண்டுகோள்

போர் தொடர்பான உண்மை தகவல்: பொது மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: போர் தொடர்பான சரியான தகவல்களை அறிந்து கொள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் whatsapp சேனலை பின் தொடர பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.பயங்கரவாதத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் நிலைகுலைந்து காணப்படுகிறது. அந்நாடு பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் செயல்படுகிறது. இந்தியாவின் தாக்குதலில் அந்நாட்டிற்கு பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. ஆனால், அது குறித்து எதுவும் தெரிவிக்காத பாகிஸ்தான், இந்தியா தாக்குதல், சேதம், வீரர்கள் குறித்து பொய்யான தகவலை பரப்பி வருகிறது.இதனை உடனடியாக ' FactCheck' செய்யும் மத்திய அரசு, பாகிஸ்தான் பரப்பும் பொய்யை அம்பலப்படுத்தி வருகிறது.இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த முக்கியமான நேரத்தில், வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான பொய் தகவல்கள் பரவி வருகின்றன. எச்சரிக்கையுடன் இருப்பதுடன், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் போர் தொடர்பான உண்மையான தகவலை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்அப் சேனலை(https://whatsapp.com/channel/0029VaEHkn3JkK7BfWTsm23W) பின்பற்றுங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mr Krish Tamilnadu
மே 10, 2025 18:17

ஈவு இரக்கமற்ற மிருகத்தனமான அரக்க மனம் கொண்ட கயமை கூட்டங்கள் நமது மன உறுதியை எத்தனை முறை அசைத்து பார்த்துள்ளனார். ஏகப்பட்ட கட்டுபாடுகளுடன் அவர்களுடன் மோதிய நமது ஆண்களின் இலக்கணம் இந்திய கனவு ஜாவான்களை நாம் இழந்து இருப்போம். பொருளாதார சீர்கேடு, கள்ள நோட்டு, வாழ்வின் அச்சுறுத்தல் என நமது ஸ்திரத்தன்மையை அசைத்து அசைத்து பார்த்த நாடு, இன்று நீலிக் கண்ணீர் வடிக்கிறது. ஆனால் இன்றும் சில இடங்களின் மேற்கூரையையும், சில பயங்கரவாதிகளையும் அழித்தோடு அமைதி கொண்டு உள்ளோம், எந்த ஒரு செயலும் பின்விளைவுகளை தரும் மாறாத வடுகளை ஏற்படுத்தி விட கூடாது என்பதற்காக. பலம் இருந்தும் இளகிய மனதோடு இளைப்பாறுகிறோம். இந்திய கனவுகள் என்றுமே காந்திய வழியில்.


RAMAKRISHNAN NATESAN
மே 10, 2025 17:30

Green Pigs மற்றும் அவர்களை அண்டி வாழும் நடுநிலை Nakkis தவிர வேற யாரு பண்ணுவாங்க ?


புதிய வீடியோ