உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அலிகார் பல்கலைக்கு சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது; சுப்ரீம் கோர்ட்

அலிகார் பல்கலைக்கு சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது; சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: அலிகார் பல்கலைக்கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதை மறுக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசம் அலிகார் பல்கலைக்கழகம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு சர் சையது அகமது கான் என்பவரால் நிறுவப்பட்டது. முஸ்லிம் மாணவ, மாணவிகள் அதிகம் பயின்று வரும் இந்தப் பல்கலையில் 50 சதவீத ஒதுக்கீடு இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், அலிகார் முஸ்லிம் பல்கலைகழகம் சிறுபான்மை கல்வி நிறுவனமாக இருந்தது கிடையாது என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தலைமை சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பை வெளியிட்டது. அதில், தலைமை நீதிபதி உள்பட 4 நீதிபதிகள் ஒரு கருத்தையும், 3 நீதிபதிகள் மாறுபட்ட கருத்தையும் தெரிவித்தனர். பாராளுமன்ற சட்டத்தால் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் என்பதற்காக, அலிகார் பல்கலைக்கு சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கினர். இதன்மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது உறுதியாகியுள்ளது. ஓய்வுபெற இருக்கும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு இது கடைசி வேலைநாளாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Dharmavaan
நவ 08, 2024 17:56

நல்ல செய்தி கடைசி வேலை நாள் ...ஏதோ நாட்டை விட்டது


கனோஜ் ஆங்ரே
நவ 08, 2024 19:11

தர்மராசா.... இது நல்ல செய்தி இல்ல...? அடுத்து பதவியேற்க உள்ள நீதியரசர் ரொம்ப ஸ்டிரிட் ஆபிசர்...? அது தெரியுமா... சொல்ல முடியாது, இவரைவிட ரொம்ப, ரொம்ப நல்லவரா இருப்பார்...?


புதிய வீடியோ