உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலக அழகியாக தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா தேர்வு

உலக அழகியாக தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங் ஸ்ரீ, 2025ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.ஐதராபாத்தில் நடந்த உலக அழகி போட்டியின் இறுதிப்போட்டி இன்று( மே 31) இரவு ஹைடைக்ஸ் அரங்கில் நடந்தது. சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்ட போட்டியில் இந்தியா சார்பில், 'மிஸ் இந்தியா' பட்டம் வென்ற நந்தினி குப்தா பங்கேற்றார். 40 பேர் காலிறுதிக்கு முன்னேறினர். இதில் முதல் 8 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை நந்தினி குப்தா தவறவிட்டார்.தொடர்ந்து இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று, தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங் ஸ்ரீ 2025ம் ஆண்டிற்கான உலக அழகியாக தேர்வானார். எத்தியோப்பியாவை சேர்ந்த ஹசேட் டெரேஜே அட்மாசு இரண்டாவது இடத்தை பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

இளந்திரையன் வேலந்தாவளம்
ஜூன் 01, 2025 14:45

தாய்லாந்தில் பெரும்பாலும் இந்திய பெயர்களை காணலாம்.. சுஜாதா ஸ்ரி..மருவி சுச்சாட்டா ஸ்ரி ஆனது


ஆனந்த்
மே 31, 2025 22:46

இந்திய அழகி, இறுதிப்போட்டிக்கு கூட வராதது வருத்தமே


ஆனந்த்
மே 31, 2025 22:46

வாழ்த்துகள்.