மிட்சல் மார்ஷ் அதிரடி சதம்: லக்னோ அணி 235 ரன்கள் குவிப்பு
ஆமதாபாத்: பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மிட்சல் மார்ஷ் சதமடிக்க லக்னோ அணி 235 ரன்கள் குவித்தது.பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டி ஆமதாபாத் நகரில் நடக்கிறது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது.துவக்க வீரர்களாக அயிதம் மார்க்ரம் , மிட்சல் மார்ஷ் களமிறங்கினர். மார்க்ரம் 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து சாய் கிஷோர் பந்தில் ஷாருக்கானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.இதன் பிறகு , மார்ஷ் உடன் ஜோடி சேர்ந்த நிக்கோலஷ் பூரன் சேர்ந்து அதிரடி காட்ட துவங்கினர். இவர்களை பிரிக்க முயன்ற குஜராத் அணியின் முயற்சி எடுபடவில்லை.மிட்சல் மார்ஷ் சதமடித்து அசத்தினார். அவர் 64 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து அர்ஷத் கான் பந்தில் ரூதர் போர்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். நிக்கோலஸ் பூரன் அரைசதம் அடித்தார். அந்த அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. பூரன் 56, ரிஷப் பன்ட் 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.