மேலும் செய்திகள்
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 25 வரை மழை
20-Jun-2025
புதுடில்லி:தலைநகர் டில்லியின் சில பகுதிகளில் நேற்று மதியத்துக்குப் பின், லேசான மழை பெய்தது. வானிலை ஆய்வு மையம் இன்று, மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.டில்லியில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தெற்கு டில்லி, தென்கிழக்கு டில்லி மற்றும் மேற்கு டில்லியின் சில பகுதிகளில் நேற்று மதியத்துக்குப் பின் லேசான மழை பெய்தது.வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'டில்லியில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். ராஜோரி கார்டன், படேல் நகர், புத்த ஜெயந்தி பூங்கா, துவாரகா, ரோஹிணி, மாளவியா நகர், ஹவுஸ்காஸ், டில்லி கன்டோன்மென்ட், பாலம், லோதி சாலை, நேரு ஸ்டேடியம், சர்வதேச விமான நிலையம், டிபன்ஸ் காலனி, லஜ்பத் நகர், இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலை, அய நகர், டெரமாண்டி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இன்று மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.டில்லியில் நேற்று வெப்பநிலை, 35 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. காற்றின் தரக்குறியீடு நேற்று காலை, 9:00 மணிக்கு 82 ஆக பதிவாகி இருந்தது. இது திருப்தியான நிலை என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
20-Jun-2025