உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த வாரம் பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவ.,25ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. டிச., 20ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அனுமதிக்க கோரி, அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tqtbhvds&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று (டிச.,12) டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த வாரம் பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த மசோதாவை சட்டமாக்கி நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது.எதிர்க்கட்சியினர் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தக் கூடாது என திட்டவட்டமாக கூறி வருகின்றனர். இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஆராய்ந்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ديفيد رافائيل
டிச 13, 2024 10:34

கள்ள ஓட்டு மற்றும் ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறைய வாய்ப்பிருக்கு. ஓட்டு போட தேவையற்ற பள்ளி மற்றும் கல்லூரி தொழில் நிறுவனத்திற்கான விடுமுறை தவிர்க்கலாம்.


G.manivannan 65
டிச 12, 2024 21:49

Super ?


Kanns
டிச 12, 2024 20:01

BJP AFRAID of Losing Ballot-paper Elections. Entire Opposition Must Boycott Elections


vadivelu
டிச 12, 2024 20:39

தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தினால் என்ன தவறு ?


தத்வமசி
டிச 12, 2024 21:16

நதியில் குளித்து விட்டு வரும் யானை எதிரே சாக்கடையில் இருந்து எழுந்து வந்த ஒரு உயிரியைப் பார்த்து ஒதுங்கி சென்றதாம். அதைப் பார்த்து அந்த உயிரி சொன்னதாம், என்னைப் பார்த்து அந்த யானை பயந்து விட்டது.


hari
டிச 12, 2024 21:47

foolish comments


Ramesh Sargam
டிச 12, 2024 19:35

நாங்கள் எதிர்ப்போம் - திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்ஸ்.


GMM
டிச 12, 2024 18:46

சட்ட பேரவை, பாராளுமன்ற உறுப்பினர் தேர்வை ஒரே நேரத்தில் வைப்பதால், எதிர் கட்சிகளுக்கு என்ன இடையூறு. ? முன்பு சில தொகுதியில் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்துள்ளது. தற்போது தொழில் நுட்பம் வளர்ச்சி. ஒரே தேர்தல் நாடுமுழுவதும் விரிவு படுத்தப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் ஆயுள், அதிகாரம், சலுகைகள் குறையாது. வாக்காளர்கள் உரிமை மாறாது. பின் ஏன் எதிர்ப்பு. ?


ஆரூர் ரங்
டிச 12, 2024 17:50

ஒரே நேர தேர்தலை ஆதரித்து மு கருணாநிதி தனது நெஞ்சுக்கு நீதி வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் எழுதியுள்ளார். ஆனால் இப்பொழுது பச்சோந்தி முதல்வர் எதிர்ப்பார்.


S S
டிச 12, 2024 17:49

அடிக்கடி தேர்தல். அதனால் மக்களை அடிக்கடி சந்திக்க வேண்டியுள்ளது. இந்தியா முழுவதும் 5ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என்று மாற்றிவிட்டால் மக்களை சந்திக்க வேண்டிய தேவை இருக்காது என்பது ஆட்சியாளர்களின் எண்ணம்.


Rajan
டிச 12, 2024 16:58

எப்படியும் ஃபெயில், பரிட்சை எழுதினால் என்ன, எழுதாவிட்டால் என்ன? காண்டீன் வியாபாரம் அமோகம்


என்றும் இந்தியன்
டிச 12, 2024 16:53

1-சூரியன் கிழக்கில் உதிக்கின்றது - மோடி. 2-எதிரிக்கட்சிகள் : சூரியன் உதிப்பதில்லை சூரியனை சுற்றி கோள்கள் சுற்றுகின்றன. இது கூடத்தெரியாத பிரதமர். ஆகவே நாடாளுமன்றத்தில் இதை நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும். மோடி ஒத்துக்கொள்ளாவிட்டால் நாங்கள் நாடாளுமன்றம் வெளிநடப்பு செய்வோம்.


KavikumarRam
டிச 12, 2024 17:50

வாழ்த்துகள். சுடாலின் மாதிரியே புறியாத மொழியில பேசுறீங்க.


karthik
டிச 12, 2024 16:51

நாட்டின் எதிரி காட்சிகள் உருப்படாத வேளைகளில் பொழுதையும் மக்களையும் கெடுத்துக்கொண்டு இருக்கும் பொழுது.. ஒரு உண்மையான தலைவன் தான் ஏற்றுக்கொண்ட கடமையில் தெளிவாக கவனமாக இருக்கின்றான் அதே பாதையில் செல்கின்றான்... பாரதம் இந்த தலைவனை விட்டுவிட கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை