உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய சரித்திரம் படைத்தார் மோடி!

புதிய சரித்திரம் படைத்தார் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- சிறப்பு செய்தியாளர்-தொடர்ந்து அதிக நாட்கள் பதவி வகிக்கும் பிரதமர் என்ற சாதனையை பிரதமர் மோடி இன்று படைத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yxh2oeyd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02014 ம் ஆண்டு மே 26 ம் தேதி பிரதமராக மோடி பதவியேற்றார் . அது முதல் தற்போது வரை அப்பொறுப்பில் தொடர்ந்து நீடித்து வருகிறார். 2026 ஜூலை 25 ல் முன்னாள் பிரதமர் இந்திராவின் மிக நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தார் என்ற சாதனையை முறியடித்தார். முன்னாள் பிரதமர் இந்திரா 4077 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்துள்ளார்.இந்தியாவின் முதல் பிரதமரான நேரு,1952 மே 13 ம்தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பதவியேற்றார். தொடர்ந்து 4,398 நாட்கள் பிரதமராக பணியாற்றினார்.தற்போது அந்த சாதனையை முறியடித்து பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார்.இதுவரை பிரதமராக பதவி வகித்தவர்கள், எத்தனை நாட்கள் அந்தப் பதவியில் இருந்தார்கள் என்ற விவரம்:பிரதமர் - பதவி வகித்த நாட்கள்மோடி - 4399 நாள் (இன்றுடன்)நேரு - 4398 நாள்இந்திரா - 4078 நாள்மன்மோகன் - 3657 நாள்வாஜ்பாய் - 2257 நாள்ராஜிவ் - 1859 நாள்நரசிம்மராவ் - 1792 நாள்மொரார்ஜி - 857 நாள்சாஸ்திரி - 582 நாள்வி.பி.சிங் - 344 நாள்

பாராட்டு

தொடர்ந்து நீண்ட நாட்கள் பதவி வகிக்கும் பிரதமர் என்ற சாதனை படைத்த மோடிக்கு, இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.

தீர்மானம்

மேலும், நீண்ட கால பிரதமர் பதவி வகித்தவர் என்ற சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொண்டு வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
ஜூன் 11, 2026 09:04

உலக அளவில் மிக அதிக நாட்கள் சாதனை பிரதமர் என்ற பட்டமும் இவருக்கே!


Sivaraman
ஜூன் 10, 2026 20:53

கார்கில் போர் , கோவிட் நோய் தடுப்புப் பணிகள் மேற்கு ஆசியப் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வரும் காலச் சரித்திரதில் இடம் பெறும்..


தாமரை மலர்கிறது
ஜூன் 10, 2026 18:35

இந்த சரித்திரத்தை மோடி படைக்க உறுதுணையாக இருந்தது ஆர் எஸ் எஸ் என்பதை யாரும் மறக்க கூடாது.


Natarajan Ramanathan
ஜூன் 10, 2026 15:52

3657 நாட்கள் பதவியில் இருந்தது எல்லாம் அநியாயம்.


guna
ஜூன் 10, 2026 16:12

நீ பிறந்ததே பாரம்..என்ன செய்ய


T Jayakumar
ஜூன் 10, 2026 14:43

கவலைப்படாத. 2029ல் வெற்றி பெற்று இந்திய மக்களின் பேராதரவுடன் நான்காவது முறையாக நரேந்திர மோடி பிரதமராவார்


spr
ஜூன் 10, 2026 14:38

சந்தேகமில்லாமல் திரு மோடி இதைவிடப் பல சாதனைகளைச் செய்திருக்கிறார் அதில் மிக முக்கியமானது ஊழல் குற்றச்சாட்டில் நிரூப்பிக்கப்பட்டும் பலரை இன்னமும் தண்டிக்காமல் இருப்பது அடுத்தபடியாக குற்றம் புரிபவர் தப்பிக்க ஏதுவாக சட்டத்தில் பல ஓட்டைகள் இருக்கிறது என்று பலமுறை நிரூப்பிக்கப்பட்டும் அதனைச் சீர் செய்ய முயற்சி எதுவும் எடுக்காமல் இருப்பது இன்னமும் சொல்லப் போனால் ஒரு மனிதனிடம் அவன் இதயத்தை தொட அவனது மொழியில் பேச முயற்சிக்காமல் இருப்பது அவரது பன்னாட்டு உறவினைச் சீர் செய்யும் முயற்சியால் இதற்கு நேரமில்லை என்று சொன்னால் கூட சட்டத்துறை அமைச்சர் என்றொரு மனிதர் இருக்கிறாரே அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?


V Venkatachalam, Chennai-87
ஜூன் 10, 2026 14:36

வாழ்த்துக்கள் பிரதமர் அவர்களே. உங்களை வாழ்த்துவதில் அளவில்லா ஆனந்தம் அடைகிறோம். நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க. வாழ்கவே..


Nandakumar Naidu
ஜூன் 10, 2026 14:26

ஒரு தேசவிரோதி, சமூக விரோதி, இந்து விரோதி, மக்கள் விரோதி, சரித்திரம் படைத்தார் என்பதை விட ஒரு ஒரு தேச பக்தர், சமூக பக்தர்,மக்கள் பக்தர் சரித்திரம் படைத்தார் என்பது தான் முக்கியம். இப்படி பதிவிட வேண்டும்.


Tamilan
ஜூன் 10, 2026 14:23

நாட்டில் அனைத்தையும் கொள்ளையடித்து ஒரு சிலகும்பலிடம் அந்நியர்களிடம் தாரைவார்த்துவிட்டு அந்நியர்களின் கைதட்டலை மட்டுமே வாங்கிக்குவித்துக்கொண்டிருக்கிறார்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 10, 2026 14:51

தமிழன் என்ற பெயரில் ஒளிந்திருக்கும் அமைதி மார்க்கமே...... பாகிஸ்தானில் நடைபெருபவைக்கெள்ளாம் கருத்து தெரிவிக்க வேண்டாம்.....!!!


முக்கிய வீடியோ