உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 அதிநவீன கடற்படை கப்பல்கள்;நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி!

3 அதிநவீன கடற்படை கப்பல்கள்;நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி!

மும்பை: இந்திய கடற்படைக்காக தயார் செய்யப்பட்டுள்ள ஐ.என்.எஸ்., சூரத், ஐ.என்.எஸ்., நீலகிரி, ஐ.என்.எஸ்., வாக்சீர் ஆகிய மூன்று கப்பல்களை, இன்று (ஜன., 15) பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு இன்று பிரதமர் மோடி சென்றார். காலை 10 மணிக்கு மும்பை கடற்படை தளத்துக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து பேசினார்.பின்னர் பிரதமர் மோடி ஐ.என்.எஸ்., சூரத், ஐ.என்.எஸ்., நீலகிரி, ஐ.என்.எஸ்., வாக்சீர் ஆகிய மூன்று கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.மூன்று போர்க்கப்பல்களின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:P15B வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் திட்டத்தின் நான்காவது மற்றும் இறுதிக் கப்பலான ஐ. என். எஸ்., சூரத், உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன வசதி கொண்ட கப்பலில் ஒன்றாகும்.இது 75 சதவீதம் உள்நாட்டிலே வடிவமைக்கப்பட்டுள்ளது. P17A ஸ்டெல்த் திட்டத்தின் முதல் கப்பலான ஐ.என்.எஸ்., நீலகிரி, இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டது. இது அடுத்த தலைமுறை உள்நாட்டு போர் கப்பல்களில் முக்கியமான ஒன்றாக திகழும்.P75 ஸ்கார்பீன் திட்டத்தின் ஆறாவது மற்றும் இறுதி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ்., வாக்சீர், நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் நிபுணத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. இது பிரான்சின் கடற்படைக் குழுவுடன் இணைந்து கட்டப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
ஜன 15, 2025 08:09

சூப்பர்... வாழ்த்துகள்.


நிக்கோல்தாம்சன்
ஜன 15, 2025 06:19

நாட்டை காக்கும் வீரர்களை, வீராங்கனைகளை மதிக்கிறேன் , பாராட்டுகிறேன்


Ramesh Sargam
ஜன 14, 2025 22:30

மோடி ஆட்சியில் நடக்கும் வியத்தகு முன்னேற்றங்கள் பாராட்டுக்குரியவை. அட, பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. இந்த எதிர்க்கட்சியினர், தேசதுரோகிகள் பேசாமல் இருந்தால் அதுவே போதுமானது.


MARI KUMAR
ஜன 14, 2025 22:27

கடற்படை முன்னேற வாழ்த்துக்கள்


இளந்திரையன் வேலந்தாவளம்
ஜன 14, 2025 22:19

அருமை


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 14, 2025 22:17

நன்று ..... பாராட்டுக்கள் ..... தேசபக்தர்களுடன் சேர்த்து தேசபதர்களையும் இவை பாதுகாக்கின்றன ....


Pandi Muni
ஜன 15, 2025 09:17

பதர்களையும் காப்பாற்ற இங்கே ஓங்கோல் திருடர்கள் இருக்கிறார்கள்.


புதிய வீடியோ