உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏ.ஐ., மூலம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பு; உருவாக்க மோடி உறுதி

ஏ.ஐ., மூலம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பு; உருவாக்க மோடி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக திகழ வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளோம்', என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டில்லியில் பிரதமர் மோடியை இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ., விஷால் சிகா இன்று சந்தித்து பேசினார். இது தொடர்பான போட்டோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த விஷால் சிகா, 'பிரதமர் மோடியை சந்தித்தது மிகவும் பெருமையாக உள்ளது. ஏ.ஐ., தொழில்நுட்பம் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினோம். நம் நாட்டு மக்களிடம் தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்த புரிதல் உள்ளது. மக்களை மேம்படுத்த தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது உள்ளிட்ட விஷயங்கள் பற்றி பேசினோம்,' எனக் குறிப்பிட்டிருந்தார். அவரது பதிவை டேக் செய்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார். அதாவது, 'உண்மையிலான மிகுந்த ஆழமான கலந்துரையாடல். ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக திகழ வேண்டும் என்று இந்தியா உறுதி பூண்டுள்ளது. அதை பயன்படுத்தி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளோம்', எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
ஜன 05, 2025 12:50

ஏ.ஐ தொழில்நுட்பத்தால் ஹெச்1 விசாவாவுல ஆள் எடுக்கறதே குறைஞ்சிட்டு வருதாம். இதுல உள்ளூரில் வேலைவாய்ப்பை அதிகப் படுத்தப் போறாராம்.


தாமரை மலர்கிறது
ஜன 05, 2025 01:44

வெரி குட். இதுவரை பணக்காரர்கள மட்டுமே அனுபவித்து வந்தவற்றை குப்பனுக்கும் சுப்பனுக்கும் செல்லும்வகையில் அமைக்கும். . இந்த ஏ ஐ தொழில்நுட்பத்தால், அனைவருக்கும் குறைவான விலையில் தொழில்நுட்பங்கள் கிடைக்கும். ஏனனில் கணினி இளைஞர்களின் தேவை எதிர்காலத்தில் அதிகம் தேவை படாது. அது மட்டுமின்றி படித்தவனுக்கு தான் எல்லாம் என்ற நிலையும் மாறி, எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலை வரும்.


Kalyanaraman
ஜன 04, 2025 20:51

கூர்மையான கத்தியினால் பலருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்ற முடியும். பலரை குத்தி கொலை செய்யவும் முடியும். இதில் எல்லோரும் பயப்படுவது, சிந்திப்பது கொலை பற்றி மட்டுமே. மாறாக, பிரதமர் மோடி அவர்கள் மட்டுமே இத் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களுக்கு நன்மைகளை செய்ய யோசிக்கிறார். வாழ்க பாரதம். வளர்க பாரதம்.


அப்பாவி
ஜன 04, 2025 20:07

இப்போ இருக்குற வேலை வாய்ப்பை உருவாம இருந்தாலே போதும். ஏ.ஐ என்னவெல்லாம் பண்ணும்னு இன்னும் அதை கண்டு பிடிச்சவங்களுக்கே தெரியாது.


முக்கிய வீடியோ