உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள்: மெஸ்ஸி புதிய சாதனை

பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள்: மெஸ்ஸி புதிய சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோவை முந்தியுள்ளார்.இன்று நடைபெற்ற மேஜர் லீக் கால்பந்தில், இன்டர் மியாமி அணி என்.ஒய் ரெட் புல்ஸை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.இதன் மூலம், புகழ்பெற்ற அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவை முந்தினார். ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் மெஸ்ஸி.ரெட் புல்ஸுக்கு எதிரான இரட்டை கோல்கள், மெஸ்ஸி தனது பெனால்டி அல்லாத கோல்களின் எண்ணிக்கையை 764 ஆக உயர்த்த உதவியது. இது ரொனால்டோவை விட ஒன்று அதிகம். தற்போது 38 வயதாகும் புகழ்பெற்ற அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி, 874 கோல்களை அடித்துள்ளார். ரொனால்டோ 938 கோல்களை அடித்துள்ளார். ஆனால் மெஸ்ஸி, ரொனால்டாவை விட 167 போட்டிகள் குறைவாக விளையாடி உள்ளார். கடந்த 8 ஆட்டங்களில் 6 இரட்டை கோல்களை அடித்ததன் மூலம் மெஸ்ஸியின் சமீபத்திய பார்ம் உயர்ந்து உள்ளது.மெஸ்ஸி கடந்த 8 ஆட்டங்களில் 13 கோல்களை அடித்துள்ளார்.கோல்கள்: மெஸ்ஸி-874ரொனால்டோ 938பெனால்டி:மெஸ்ஸி- 110ரொனால்டோ-175ஆட்ட நாயகன் விருது:மெஸ்ஸி-425ரொனால்டோ-220


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி