உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண் குழந்தையை ஆற்றில் வீசிய தாய் கைது

பெண் குழந்தையை ஆற்றில் வீசிய தாய் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள குருமாஷேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா, 35. இவரது கணவர் சுபாஷ். இந்த தம்பதியின் 3 வயது பெண் குழந்தை கல்யாணி. நேற்று முன்தினம் மாலை அங்கன்வாடியில் இருந்து மகளை அழைத்து வருவதற்காக, சந்தியா சென்றார். வரும் வழியில் குழந்தை காணாமல் போய் விட்டதாக பெற்றோரிடம் தெரிவித்தார்.சந்தியாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குபின் முரணாக பேசினார். பின், மகளை சாலக்குடி ஆற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஒன்பது மணி நேர தேடுதலுக்கு பின், குழந்தையின் உடலை மீட்டனர். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சந்தியா, மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ