உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பீதியில் வெளியேறிய மாணவர்கள்

டில்லியில் பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பீதியில் வெளியேறிய மாணவர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புதுடில்லியில் பிரபல பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வெளியான மிரட்டலையடுத்து, மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.தலைநகர் டில்லியில் கடந்த சில வாரங்களாக ஏராளமான பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மிரட்டலையடுத்து, போலீசார் சோதனை நடத்திய போது வெடிகுண்டுகள் எங்குமே கண்டுபிடிக்கப்படவில்லை, வெறும் மிரட்டல் என்பது தெரிய வந்தது.இருப்பினும், மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இன்றும் (செப்.20) பிரபல பள்ளிகளுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டிபிஎஸ் துவாரகா, கிருஷ்ணா மாடல் பள்ளி, சர்வோதயா வித்யாலயா உள்ளிட்ட பிரபல பள்ளிகளும் வெடிகுண்டு மிரட்டலில் இருந்து தப்பவில்லை.ஒரே நேரத்தில் பல பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டலால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் பெரும் குழப்பமும், பீதியும் எழுந்தது. அந்தந்த பள்ளிகளில் உள்ள மாணவர்கள் பாதுகாப்புடன் வளாகத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்டனர்.தகவலறிந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் குழுக்களாக பிரிந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்டவில்லை. இது வெறும் புரளி என்பதை உறுதிப்படுத்திய போலீசார், மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்த விசாரணையை தொடங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Srikanth Ekbote
செப் 20, 2025 11:44

Super


MARUTHU PANDIAR
செப் 20, 2025 11:10

வேறு எதோ பெரிய சதிக்கு திட்டமாக இருக்கலாம். போலீஸ்,நிர்வாகம் மற்றும் உளவுத்துறையின் கவனத்தை அதிலிருந்து திசை திருப்பும் வேலையாக கூட இருக்கலாம். இத்தாலி மாபியாவுக்கே வெளிச்சம். உஷார் உஷார்.


MARUTHU PANDIAR
செப் 20, 2025 11:06

நேபாளத்தைப் போல் இங்கும் மிகப் பெரிய மாணவர் இளைஞர் கலவரம் எந்த நேரமும் வெடிக்கலாம் என்பதும் அது எந்த நேரம் என்பதும் அது இத்தாலிய இளவரசனுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என்றும் கூறுகிறார்கள். பப்பு பேசி வருவதைப் பார்த்தால் அப்படித் தான் தோன்றுகிறது. உளவுத்துறையும் ள்துறையும் மற்ற விஷயங்களை எல்லாம் ஒதுக்கி விட்டு, இதில் கோட்டை விடாமல் இருக்க வேண்டும் போல.


முருகன்
செப் 20, 2025 09:07

இது போல் செய்யும் நபர்களை கைது செய்து ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு சிறையில் பல வருடங்கள் அடைக்க வேண்டும்


Moorthy
செப் 20, 2025 08:55

இப்போதாவது வெறும் மிரட்டல்கள்தான் விடப்படுகிறது சுமார் 13 ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் மூலைக்கு மூலை குண்டுகள் வெடித்த காலம் செயல் திறனற்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் டில்லி மற்றும் வட இந்திய நகரங்கள் கடும் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானது ...ஆனால் தற்போது , அதுவும் ஆபரேஷன் சிந்தூர் க்கு பின் டில்லி பாதுகாப்பான ஒரு நகரம்


Natarajan Ramanathan
செப் 20, 2025 08:43

அடிக்கடி இந்தமாதிரி நடக்கிறது. இந்த மாதிரி குற்றங்களை செய்பவர்களை கடுமையான சட்டப்பிரிவுகளில் கைது செய்து பத்தாண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனை விதிக்கவேண்டும்.


MUTHU
செப் 20, 2025 11:13

இது ஒன்னும் பெரிய குற்றமில்லைன்னு ஜாமீன்ல விட்டிடுவாரு. அல்லது அப்படியே தண்டனை வழங்கினாலும் திராவிட எஜமான் மாதிரி அங்குள்ள muddal அமைச்சர் வெளியில் விடச்சொல்லி தீர்மானம் போட்டு வெளியில் அனுப்பி விடுவார்கள்.


சமீபத்திய செய்தி