உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டிகோ விமானி திடீரென லீவு; மும்பை செல்லும் விமானம் 3 மணி நேரம் தாமதம்

இண்டிகோ விமானி திடீரென லீவு; மும்பை செல்லும் விமானம் 3 மணி நேரம் தாமதம்

மும்பை: வாரணாசியிலிருந்து மும்பை நோக்கிச் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தை இயக்கவிருந்த விமானி திடீரென உடல்நிலை சரியில்லை என விடுமுறை எடுத்ததால், அந்த விமானம் 3 மணி நேரம் தாமதம் ஆனது.வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு இண்டிகோ விமானத்தை இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விமானம் சரியான நேரத்தில் புறப்படாமல் தாமதம் ஆனது. விமான நிலையத்தில் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த விமானத்தை இயக்க நியமிக்கப்பட்ட விமானி திடீரென உடல்நிலை சரியில்லை என்று விடுமுறை எடுத்ததால் இந்த தாமதம் ஏற்பட்டது என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. வாரணாசி விமான நிலையம் இண்டிகோ நிறுவனத்தின் முக்கிய தளமாக இல்லாததால், அகமதாபாத்தில் இருந்து மாற்று விமானி வரவழைக்கப்பட்டார். இதற்கான கூடுதல் நேரம் தேவைப்பட்டதே இந்தத் தாமதத்திற்குக் காரணமாகும்; இந்த விமானம், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுப் புதிய விமானி வந்தவுடன் பத்திரமாக மும்பை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்ததால், சிறிது தாமதம் ஏற்பட்டது. விமானத் தாமதத்தின் போது காத்திருந்த பயணிகளுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது, பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என இண்டிகோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ganesh Siva
செப் 11, 2026 17:50

சிற்றுண்டியை கொடுத்து சமாளித்து உள்ளார்கள்


GIRI
செப் 11, 2026 16:02

எனது பியூட்டி டைம் முடிந்து விட்டது என்று அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறங்கிச் சென்று விட்டார் டிரைவர். தொலைதூர அறையில் பயணத்தால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். பார்த்து டிரைவர் ஏற்பாடு செய்ய இரண்டு மணி நேரமாயிற்று அதுவரை அந்த ட்ரெயின் அரக்கோணத்தில் நிப்பாட்டப்பட்டது.


baala
செப் 11, 2026 17:12

அது அந்த ஓட்டுநர் தவறில்லை. அதற்க்கு முன்பே நிர்வாகம் செய்ய வேண்டிய ஏற்பாடு. ஏன் செய்யவில்லை .


கிரிராஜ்
செப் 11, 2026 15:59

RAJDHANI EXPRESS DRIVER வராததால் ரயில் புறப்படுவதற்கு 5 மணி நேரம் தாமதம்


raj
செப் 11, 2026 11:41

அவரும் மனிதர் தானே அதனால் விடுப்பு எடுத்துள்ளார்


புதிய வீடியோ