உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பையை திக்குமுக்காட வைத்த கனமழை; ரயில், பஸ் சேவை முற்றிலும் முடக்கம்

மும்பையை திக்குமுக்காட வைத்த கனமழை; ரயில், பஸ் சேவை முற்றிலும் முடக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பை நகரில் 24 மணிநேரத்தில் 100 மி.மீ, மழை பெய்துள்ளது. பஸ், ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.மும்பையில் நேற்று முதல் பரவலாக பெய்யத் தொடங்கிய மழை, இன்று அதிகாலை முதல் வெளுத்து வாங்கியது. இடைவிடாத கனமழை எதிரொலியாக நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடானது.தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் நிலவியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பஸ்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கின.கடந்த 24 மணி நேரத்தின்படி நகரில் 100 மி.மீ., மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. நகரின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் முறையே 58 மற்றும் 75 மி.மீ.மழை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக, மும்பை நகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தானே, பால்கர், ராய்கட் ஆகிய பகுதிகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மழையினால், மும்பையில் புறநகர் ரயில் மற்றும் பஸ் சேவை முற்றிலும் முடங்கி உள்ளது. மெட்ரோ ரயில் சேவையிலும் பாதிப்பு காணப்பட்டது. இதனிடையே, மழையின் தாக்கம் காரணமாக, இண்டிகோ விமான நிறுவனம் அதன் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மும்பை நகரின் பல பகுதிகளில் தொடர் மழை நீடிக்கிறது. சாலை போக்குவரத்திலும் பாதிப்பு இருப்பதை காண முடிகிறது. எனவே, பயணிகள் தங்கள் விமானத்தின் புறப்பாடு மற்றும் வருகை தொடர்பான தகவல்களை முன்னரே அறிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜூன் 16, 2025 20:16

மழைக்கால பிரச்சினைகள். இப்படி பிரச்சினைகள் வரும் என்று தெரிந்திருந்தும் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து மக்களை பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றவேண்டும் என்கிற ஒரு நல்ல எண்ணம் ஆட்சியாளர்கள் இடையே இல்லை. வருத்தம்.


chennai sivakumar
ஜூன் 16, 2025 20:55

ஏரிகளில் அடுக்கு மாளிகைகளை கட்டினால் தண்ணீர் எங்கே போகும். எல்லா ஊரிலும் இதே நடக்கிறது.


Raman
ஜூன் 16, 2025 22:27

Shri Ramesh, Mumbai receives heavy rainfall, more than 200 cm rain fall during SW monsoon..its almost twice or more than rainfall received by Madras..despite that, the city is reasonably well maintained unlike Madras, Bangalore etc...Roads are wider, city is bigger, excellent catchment areas... Yes, during huge rainfall like 20 to 30 cm on a span of 2 to 3 hrs, bit of issues, otherwise well managed city in India, its my second home, first being Madras city...regards..


சமீபத்திய செய்தி