உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவன் பலாத்காரம்: மும்பை ஆசிரியை கைது

மாணவன் பலாத்காரம்: மும்பை ஆசிரியை கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில், 16 வயது மாணவனுக்கு, மது மற்றும் மாத்திரைகள் தந்து ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மும்பையில் உள்ள பிரபல பள்ளியில், 40 வயது பெண், ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அவரிடம் பயிலும், 16 வயது மாணவன் மீது ஆசிரியைக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. கடந்தாண்டு ஜனவரியில், பள்ளி ஆண்டு விழாவுக்கு நடன பயிற்சி அளித்த போது, மாணவனுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு ஆசிரியைக்கு ஏற்பட்டது. ஆசை வார்த்தைஒரு சில சந்தர்ப்பங்களில் அவனிடம் அத்துமீறவும் செய்தார். அவரின் நடவடிக்கை பிடிக்காமல், மாணவன் ஒதுங்கி சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், பள்ளியில் பணிபுரியாத தோழி ஒருவரின் உதவியுடன், மாணவனின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். 'வயதுக்கு மீறியவர்களுடன் உறவு கொள்வதில் தவறில்லை. ஆசிரியைக்கும், உனக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கிறது' என, பல்வேறு ஆசை வார்த்தைகளை அந்தப் பெண் கூறியதை அடுத்து, மாணவனும், ஆசிரியை உடன் நெருங்கி பழக ஆரம்பித்தார்.ஒரு கட்டத்தில், தன் காரில் மாணவனை ஊருக்கு ஒதுக்குபுறமாக அழைத்து சென்ற ஆசிரியை, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.இதனால், பதற்றமடைந்த மாணவனுக்கு, மன அழுத்த மாத்திரைகளையும் அவர் தந்தார். பின், மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்து சென்று மாணவனை, அவர் பலமுறை பலாத்காரம் செய்தார். ஓராண்டாக இது தொடர்ந்தது. மாணவனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால், பெற்றோருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, ஆசிரியையின் அத்துமீறல் குறித்து பெற்றோரிடம் மாணவன் கூறியுள்ளான். போலீசுக்கு சென்றால், மாணவனின் படிப்பு பாதிக்கும் என எண்ணிய பெற்றோர், இந்தாண்டுடன் 12ம் வகுப்பு முடித்ததும் பிரச்னைகளும் தீரும் என நம்பினர். மாணவனும், கடந்த ஏப்ரலில், 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்ததை அடுத்து, ஆசிரியையிடம் இருந்து விலகினான். துாதுஇருப்பினும், தன் வீட்டு வேலைக்காரியை அனுப்பி, மாணவனுக்கு ஆசிரியை துாது அனுப்பியது நிலைமையை மோசமாக்கியது. இதையடுத்தே, பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். விசாரணையை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆசிரியைக்கு உடந்தையாக இருந்த தோழி மீதும் வழக்குப் பதிந்து விசாரணையை முடுக்கியுள்ளனர். பிரபல பள்ளி ஆசிரியை ஒருவர், மாணவனை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மும்பையில் பெற்றோர், மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Padmasridharan
ஜூலை 03, 2025 06:02

அங்கே ஆசிரியை செய்தார் . திருவான்மியூர் கடற்கரையிலிருந்து மிரட்டி தங்கள் வண்டியில் அறைக்கு கூட்டி செல்லும் காட்சிகளும் இங்கே உண்டு.


Padmasridharan
ஜூலை 03, 2025 06:02

அங்கே ஆசிரியை செய்தார் . இங்கே காவலர்கள் திருவான்மியூர் கடற்கரையிலிருந்து மிரட்டி தங்கள் வண்டியில் அறைக்கு கூட்டி செல்லும் காட்சிகளும் உண்டு சாமி.


Padmasridharan
ஜூலை 03, 2025 06:01

அங்கே ஆசிரியை செய்தார் . இங்கே காவலர்கள் திருவான்மியூர் கடற்கரையிலிருந்து மிரட்டி தங்கள் வண்டியில் அறைக்கு கூட்டி செல்லும் காட்சிகளும் உண்டு சாமி.


T.Senthilsigamani
ஜூலை 03, 2025 05:32

கலி முற்றி விட்டது .இந்த பள்ளியின் நிர்வாகத்தினர் இந்த ஆசிரியை இதற்கு முன்பும் பல அப்பாவி மாணவர்களை பலாத்காரம் செய்திருந்தாரா ? என விசாரிக்க வேண்டும் .


Kannan Kannan
ஜூலை 03, 2025 03:10

என்ன சொல்ல , கொடுமை


முக்கிய வீடியோ