உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின்; நிபந்தனைகள் ஏராளம்

கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின்; நிபந்தனைகள் ஏராளம்

பெங்களூரு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கி, கர்நாடகா ஐகோர்ட் உத்தரவிட்டது.பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச செய்தி அனுப்பி தொல்லை கொடுத்தார் என்பதற்காக அவரை கொலை செய்தார். அந்த வழக்கில் தர்ஷன் கைது செய்யப்பட்டார்.கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து அவரது ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வந்தது. முதுகுத்தண்டில் பிரச்னை இருந்தது கண்டறியப்பட்டது. இதை காரணம் காட்டி, கர்நாடகா ஐகோர்ட்டில் தர்ஷன் ஜாமின் கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், தர்ஷனுக்கு 6 மாத காலம் இடைக்கால ஜாமின் வழங்கினர்.* எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்பதை தெரிவிக்க வேண்டும். * ஒரு வாரத்திற்குள் தர்ஷன் சிகிச்சை பெறும் விவரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். * பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். சிகிச்சை தவிர வேறு விஷயங்களில் ஈடுபடக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ponssasi
அக் 30, 2024 17:05

சிறைச்சாலையில் மருத்துவமனைகள் இல்லையா? இல்லை மருத்துவர்கள் இல்லையா? அவர் இந்த உயர்தர சிகிச்சை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளட்டும், பணம் அவர் செலுத்தட்டும் ஆனால் அவர் சிறையில் இருந்தவாரே அனுமதித்திருக்கவேண்டும். காவலர் உதவியுடன் தினம் தினம் மருத்துவமனை சென்று பின் சிறை திரும்பவேண்டும்.


Ramesh Sargam
அக் 30, 2024 12:37

இடைக்கால ஜாமீன் கூட கொடுத்திருக்க கூடாது இந்த கொடியவனுக்கு.


புதிய வீடியோ