உறுதி அளிக்க வேண்டும்!
கர்நாடகாவில் ஆளும் காங்., அரசு, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி உள்ளது. இது, அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கான அக்கட்சியின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல். அரசியலமைப்பை மாற்ற மாட்டோம் என, சோனியா, ராகுல், கார்கே உறுதி அளிக்க வேண்டும்.ரவிசங்கர் பிரசாத், மூத்த தலைவர், பா.ஜ., அரசுக்கு விருப்பமில்லை!
லோக்சபா செயல்படுவதை மத்திய பா.ஜ., அரசு விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. தினமும் ஏதாவதொரு காரணத்துக்காக, பா.ஜ., - எம்.பி.,க்கள் தேவைஇல்லாமல் கூச்சல், குழப்பத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், சபை அடிக்கடி ஒத்தி வைக்கப்படுகிறது.பிரியங்காலோக்சபா எம்.பி., - காங்கிரஸ்பூர்த்தி செய்யவில்லை!
உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக பா.ஜ., ஆட்சி செய்து வருகிறது. ஆனால் இதுவரை, மக்களின் எதிர்பார்ப்புகளை அக்கட்சி பூர்த்தி செய்யவில்லை. இதுவரை இல்லாத வகையில், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்