உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எனது தாயை அவமதித்துவிட்டனர்: பிரதமர் மோடி வேதனை

எனது தாயை அவமதித்துவிட்டனர்: பிரதமர் மோடி வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

Deprecated: mb_convert_encoding(): Handling HTML entities via mbstring is deprecated; use htmlspecialchars, htmlentities, or mb_encode_numericentity/mb_decode_numericentity instead in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 350

புதுடில்லி: ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் எனது தாயை அவமதித்துவிட்டனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பீஹாரில் நடந்த நிகழ்ச்சியில் டில்லி இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: அம்மா தான் உலகம். அம்மா தான் எங்கள் சுயமரியாதை. பாரம்பரியம் நிறைந்த இந்த பீஹாரில் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வை நான் நினைத்து கூட பார்க்கவில்லை. எனது தாயை அவமதித்துவிட்டனர். ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் என் தாயை மட்டுமல்ல, இந்த நாட்டின் தாய்மார்களையும், சகோதரிகளையும் அவமதித்து விட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=99ndbkgp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

விமர்சனம் ஏன்?

என் இதயத்தில் எவ்வளவு வலி இருக்கிறதோ அந்த வலி பீஹார் மக்களிடமும் உள்ளது. எனது தாய் ஆர்ஜேடி காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்யும் நிலை ஏற்படும் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க முடியாது. அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத தனது தாயாரை ஏன் ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் ஏன் விமர்சனம் செய்தனர். உங்களை போன்ற கோடிக்கணக்கான தாய்மார்களுக்கு சேவை செய்ய என்னை விட்டு பிரிந்து இருந்தார்.

எந்த தொடர்பும்…!

இப்போது என் அம்மா உயிருடன் இல்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சில காலத்திற்கு முன்பு 100 வயதை நிறைவு செய்த பிறகு அவர் நம் அனைவரையும் விட்டுச் சென்றார். அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத இனி என் அம்மா, ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் அவமதித்து உள்ளனர். சகோதரிகளே, தாய்மார்களே உங்கள் முகங்களை என்னால் பார்க்க முடிகிறது. நீங்கள் உணர்ந்திருக்கும் வலியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. சில தாய்மார்களின் கண்களில் கண்ணீரை என்னால் பார்க்க முடிகிறது. இது மிகவும் வேதனையானது. என் அம்மா மிகவும் வறுமையில் என்னை வளர்த்தார். அவர் தனக்கென ஒரு புதிய சேலையை கூட வாங்க மாட்டார். எங்கள் குடும்பத்திற்காக ஒவ்வொரு பைசாவையும் சேமிப்பார். இவ்வாறு பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேசினார்.

நடந்தது என்ன?

பீஹாரில் தேர்தல் கமிஷனுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ராகுல் மேற்கொண்டு வருகிறார். தர்பங்காவில் யாத்திரையின் போது, சில காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் ராகுல், பிரியங்கா மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் போஸ்டர்கள் மேடையில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

நிக்கோல்தாம்சன்
செப் 02, 2025 21:33

அந்த குண்டனுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்காதீங்க பிரதமரே


saravanan
செப் 02, 2025 21:29

இந்தியாவில் அரசியல் நாகரிகம் எந்த அளவிற்கு கீழ்தரமாக போய் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். பிரதமரின் தாயை அதுவும் நம்மிடமிருந்து மறைந்துவிட்ட ஒருவரை கண்ணியமற்ற முறையில் விமர்சிப்பதெல்லாம் எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாதது. பிரதமர் மோடியை அரசியல் ரீதியாக நேருக்கு நேர் மோதி வெற்றிபெற முடியாதவர்களின் இயலாமை வெளிப்பாடே இத்தகைய தனிமனித தாக்குதல்கள் அரசியலில் நற்பண்புகளையும், நயத்தக்க நாகரிகத்தையும் வேண்டுபவர்கள் இதுபோன்ற அநாகரீக கூச்சல்களை நிச்சயம் கண்டனத்திற்கு உட்படுத்த வேண்டும்


Abdul Rahim
செப் 02, 2025 21:05

ஓஹோ அரசியலில் இருப்பதினால் அவர் தாயார் இல்லையா அவரை பற்றி நீங்க என்னவேனாலும் அருவருப்பாக எழுதுவீர்களா ? ஆகா மொத்தம் மோடியின் தாயார் மட்டுமே நாட்டில் புனிதர் மாட்றவர்கள் எல்லாம் உங்கள் பார்வையில் ????


Abdul Rahim
செப் 02, 2025 20:55

பிறந்த நாளுக்கு அம்மாவிடம் ஆசி வாங்க போறப்போ கூட வீடியோ ஷூட் நடத்தினவருதானே இவரு.


Ganapathy
செப் 02, 2025 21:31

உன்னயமாதிரி நாலு அம்மா ஒரு அப்பாகிட்ட ஆசி வாங்கி வீடியோ ஷூட் நடத்தலையே...உனகேன் பின்னாடி அங்க பத்த வச்சமாதிரி எரியுது?


Mahadevan
செப் 02, 2025 19:36

நாட்டுக்கு உண்மையா இருப்பீர்களா ரஹீம்.? உங்களுக்கு பற்றிசம் கிடையாதே நாட்டை பிரிப்பதே உங்கள் வேலை. அமைதி உங்களுக்கு அறவே பிடிக்காது உங்களுக்கு. நாடு நாசமா போனா உங்களுக்கு சந்தோஷம்


Abdul Rahim
செப் 02, 2025 20:37

எந்த அர்த்தத்தில் நண்பரே இந்த கருத்தை சொல்கிறீர்கள் ,இங்கே மோடிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல பேர் எழுதி இருக்கிறார்கள் ஆனால் எனக்கு மட்டும் நாட்டை சம்பந்தப்படுத்தி தாங்கள் எழுத காரணம் எனது பெயர் எனது மதம் சரிதானே இந்த கேவலமான எண்ணத்தை தயவுசெய்து மாற்றுங்கள், நாட்டை பிரித்து முஸ்லீம்களை வெளியேற்றி விட்டால் முழு ஹிந்து நாடாக மாற்றி விடலாமே என்ற எண்ணம் கொண்ட உங்க ஆர் எஸ் எஸ் தான் ஜின்னாவை தூண்டி பிரித்தது வரலாறு.அது என்றும் பொய்யாகாது,வெளியில் வேஷம் போடாத எல்லோரும் தேசத்துரோகிகளா வெளியில் போலி தேசபக்தி வேஷம் போடுபவர்கள் மட்டுமே தேசபக்தர்களா ?????


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 02, 2025 21:33

ஜின்னா ஆரம்பத்தில் இருந்தே தனி நாடு வேண்டும் என்று விரும்பியவர். அதுவும் இந்தியாவிற்கும் முன் தனது நாட்டுக்கு விடுதலை வேண்டும் என்று ஒரு நாள் முன்னதாக சுதந்திர பிரகடனம் வேண்டும் என்று கேட்டு வாங்கியவர். ஆர்எஸ்எஸ் ஆங்கிலேயருக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட இந்து மதத்தை பயன்படுத்தியது. விநாயகர் சதுர்த்தி சிலைகள் வைப்பது கூட சுதந்திர போராட்ட காலத்தில் மக்கள் ஒன்று கூடக்கூடாது என்று ஆங்கிலேயர்கள் தடை விதித்ததால் விநாயகர் சிலைகள் வீதிகளில் நிறுவி கடவுள் வழிபாடு என்பது போல காட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட உபயோகப் பட்ட வழி முறை. அது வெற்றி பெற்றதால் மக்கள் இன்றளவும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வருகின்றனர். இந்து மதம் பழமையான எல்லா மதங்களுக்கும் மூத்த மதம். ஆனால் காலத்திற்கேற்ப புதுமைகளை அரவணைத்து கொண்டு மக்கள் நவயுகத்திலும் பழமை மாறாமல் வாழ புதிய புதிய உத்திகளை பின்பற்றி கொண்டு உள்ள மதம். அதனால் தான் இந்தியா கல்வி பொருளாதாரத்தில் முன்னேறிச் கொண்டு உள்ளது. பொறாமை வெறுப்பு இந்து மதத்தில் இல்லை. மற்றவர்கள் இடம் உள்ள நல்லவைகளை ஈர்த்து கொண்டு கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க முயலும் ஒரு மதம். இந்து மதத்தில் பழமை வாத சிந்தனை இல்லை அதனால் பயங்கரவாதம் பிரிவினைவாதம் தீவிர வாதம் கிடையாது. அப்பாவி ஜனங்களை குண்டு வைத்து கொள்ளும் பழக்கம் இல்லை.


Abdul Rahim
செப் 03, 2025 14:59

கணபதி வாய கழுவு மறைந்த என் தந்தையை பற்றி உனக்கு என்ன


Rathna
செப் 02, 2025 19:07

பீகார் என்பது மிகவும் பிற்பட்ட மாநிலம். 45% படிக்காதவன் உள்ள மாநிலம். ஆனால் உயர்வேலையில், உயர்கல்வியில் IAS, IPS, IIT, IIM சேருபவர்களும் அதிகம். நல்ல கல்வி, குடும்ப வளர்ப்பு என்பது நமது வார்த்தையின் தராதரத்தையும், நாகரீகத்தையும் நிர்ணயிக்கிறது. இந்த மாதிரி உள்ள மாநிலத்தில் ஒரு கடை லாலு கட்சியை சேர்ந்தவர்கள் இந்த மாதிரி கீழ்த்தரமான கமெண்ட் அடிப்பது மிக சாதாரணம். ஆனால் அதை கண்டிக்காத நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், மாநில எதிர்க்கட்சி தலைவர் பற்றி என்ன சொல்வது?


Abdul Rahim
செப் 02, 2025 19:03

2 ரூவாய்க்கு கமலாலயத்தில் அடிமை ஊழியம் பார்க்கும் அனுபவமா என்றும் இந்தியன் ?


indi
செப் 02, 2025 18:51

Cheap politics from BJP.one guy only once made derogatory comment about PM and PM's mother,but both BJP and PM,every rally saying's hundered of times.


AMMAN EARTH MOVERS
செப் 02, 2025 18:49

செவாலியே விருது சிவாஜிக்கு பதிலா மோடிக்கு கொடுத்திருக்கலாம்


Karthik Madeshwaran
செப் 02, 2025 18:45

மக்களிடம் அனுதாபம் பெற்று, வாக்குகளை வாங்க கடைசியில் தனது தாயாரை கூட அரசியலுக்காக பயன்பட வைத்துவிட்டார் பிரதமர். உண்மையான மகன், தனது தாயாரை அவதூறாக பேசியவனை சட்டப்படி தண்டனை கிடைக்க செய்வான். அதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி அனுதாப வாக்குகளை வாங்க ஆசைப்படமாட்டான்.


ஆனந்த புஸ்ஸி, லயோலா ஜோசஃப், லாட்டரி ஆதவ்
செப் 02, 2025 19:18

ஆஹா, கேவலமாக அவர் தாயை திட்டயவர்களை பார்த்து பொங்கவில்லை. அவர் வருத்தப்பட்டால் அவரையே பழிக்கிறோம். நமக்கு விஷயம் முக்கியமில்லை. மோடியைத் தாக்க ஒரு சந்தர்ப்பம். தவறான சோப்பால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் தமிழகத்தில் தான் அதிகம். நாம் தொளபதியின் அடிப்பொடிகள்.


முக்கிய வீடியோ




அஜய் ரஸ்தோகியிடம் ஆதாரங்களை அளிக்க தவெக திட்டம்! Vijay

பொது

2 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771



இன்றைய காலை முக்கியச் செய்திகள்

பொது

3 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771





தினமலர் எக்ஸ்பிரஸ்

செய்திச்சுருக்கம்

6 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771



இன்றைய ராசிபலன்

ஆன்மிகம்

5 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771





8 சிறப்பு ரயில்கள் ரத்து: எவை எவை? முழு லிஸ்ட் Eight special trains cancelled chennai chengalpattu

பொது

15 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771



தினமலர் எக்ஸ்பிரஸ்

செய்திச்சுருக்கம்

14 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771