உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எப்.டி.ஐ., விதிமுறை மீறல்: இ-காமர்ஸ் நிறுவனம் மிந்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு

எப்.டி.ஐ., விதிமுறை மீறல்: இ-காமர்ஸ் நிறுவனம் மிந்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: நேரடி அந்நிய முதலீட்டு(எப்டிஐ) விதிகளை மீறி ரூ.1,654.35 கோடிக்கு மோசடியில் ஈடுபட்டதாக இந்தியாவின் பேஷன் இ காமர்ஸ் நிறுவனமான மிந்த்ரா, அது தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் இயக்குநர்கள் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மிந்த்ரா மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்கள், பொருட்களை மொத்தமாக வாங்கி, உடனடியாக பணத்தை செலுத்தும் முறையில் வணிகம் (Wholesale Cash & Carry' model)செய்வதாக கூறிவிட்டு பல நிறுவனங்களின் பொருட்களை ஒரு நிறுவனத்தின் பெயரில் (Multi-Brand Retail Trading (MBRT)) முறையில் வணிகத்தில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தன.விசாரணையில், மொத்த வணிகம் பெயரில் மிந்த்ரா நிறுவனத்துக்கு ரூ.1,654.35 கோடி கிடைத்துள்ளது. ஆனால், அதில் குறிப்பிட்ட அளவு பொருட்கள்,M/s Vector E-Commerce Pvt. Ltd என்ற நிறுவனத்துக்கு விற்றது தெரியவந்தது. இந்த நிறுவனம் மிந்த்ரா நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதும், நுகர்வோர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதில் எப்டிஐ விதிகள் மீறப்பட்டு உள்ளன.எப்டிஐ திருத்த விதிகளின்படி, மொத்த பொருட்கள் விற்பனை முறையில், தங்களது 25 சதவீத பொருட்களை மட்டுமே, குறிப்பிட்ட நிறுவனத்துக்கு விற்க வேண்டும். ஆனால், இந்த எல்லையை மீறி மிந்தரா நிறுவனமானது, vector E-Commerce pvt நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.மிந்த்ரா மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்கள் எடிஐ கொள்கை தொடர்புடைய விதிகள் மற்றும் 1999ம் ஆண்டு சட்டம்FEMa6(3)(b) கீழ் விதிகளை மீறியுள்ளது தெரியவந்துள்ளது.இதன் அடிப்படையில், FEMA சட்டப்பிரிவு 16(3) ன் கீழ் மிந்த்ரா நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

GMM
ஜூலை 23, 2025 19:35

அமுலாக்க துறை தோல்விக்கு காரணம் விதி மீறல் என்றால் சொத்தை முடக்கி, பணத்தை பறிமுதல் செய்து சட்டத்தை அமுலாக்கம் செய்வது இல்லை. வழக்கு தொடுக்கவா இவ்வளவு அதிகாரம் ? கோர்ட் என்றால் வக்கீல் குமாஸ்தாவை பார்ப்பது பல நாட்கள் ஆகும். மக்கள் தான் அரசு நிர்வாகம் சரி இல்லாமல் கோர்ட் படி ஏறி அழிவர். அரசு துறை என்று அரசியல் வாதிகள் , வக்கீல் முன் கைகட்டி முழித்தார்களோ அன்றே நீதி ,நிர்வாகம் முடங்கி விட்டது .


Narayanan
ஜூலை 23, 2025 15:59

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இதுவரை யாரும் கைதாகவில்லை ஏன் ? சட்ட ஓட்டையை பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பித்துவிடுகின்றனர் . அதனால் அமலாக்கத்துறை சரிவர வேலை செய்யவில்லை என்பது திண்ணம் . நீதிபதிகளும் அமலாக்கத்துறைக்கு எதிராகவே இருக்கிறார்கள்


SANKAR
ஜூலை 23, 2025 17:28

because according to 1999 law action taken in 2025 on myntra started in 2007 !


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை