உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாம் தமிழர் கட்சிக்கு ஏர் கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னத்தை புதிய சின்னமாக ஒதுக்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கடந்த 14 ஆண்டுகளாக அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்து வந்த நாம் தமிழர் கட்சி கடந்த லோக்சபா தேர்தலில் 8.22 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. இதையடுத்து நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் நாம் தமிழர் போட்டியிட்டது. அப்போது கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த சின்னம் வழங்கப்படாமல், அதற்கு பதிலாக தான் கரும்பு விவசாயி என்ற சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் அங்கீகாரம் பெற்றாலும் நாம் தமிழர் கட்சிக்கு கேட்ட கரும்பு விவசாயி அல்லது புலி சின்னம் கிடைக்காமல் இருந்தது. சின்னம் கேட்டு தாமதமாக விண்ணப்பித்ததால் அந்த சின்னங்கள் வேறு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. எனவே, அதை தர முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் நாம் தமிழருக்கு ஏர் கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அதற்கான கடித்தையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை நாம் தமிழர் கட்சி தமது அதிகாரப்பூர்வ தகவல் தொழில் நுட்ப பிரிவு வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.சின்னம் தொடர்பான விவகாரத்தில் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத தருணத்தில் நடைபெற்ற தேர்தல்களில் நாம் தமிழர், ஒலி வாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிட்டது. தற்போது ஏற்கனவே இருந்த கரும்பு விவசாயி சின்னத்துக்கு பதில் ஏர் கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

RAJ
மே 11, 2025 00:59

இவன் ஒரு தேசதுரோகி. இவன் கூட நிற்பவர்களும் அதே...


ஆரூர் ரங்
மே 10, 2025 21:44

ஆமை சின்னம் கிடைக்கலை. பாவம்.


முருகன்
மே 10, 2025 20:37

விவசாயத்திற்கும் இவருக்கும் என்ன தொடர்பு விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும்


மீனவ நண்பன்
மே 10, 2025 20:31

டிராக்டர் சின்னம் வாங்கியிருக்கலாம் ..ஏர் உழவன் ஸ்தாபன காங்கிரஸ் சின்னமா இருந்தது.


ஆரூர் ரங்
மே 10, 2025 21:43

ஏர் உழவன் ஜனதா கட்சியின் சின்னமாக இருந்தது. சுப்பிரமணியம் சுவாமி அதனை நீண்ட காலம் வைத்திருந்தார் *ஸ்தாபன காங்கிரசின் சின்னம் ராட்டை சுற்றும் பெண்.


Ramesh
மே 10, 2025 19:54

Congrats.. Real Hard work by Seeman..


கேளடா மானிடா
மே 10, 2025 19:37

நல்வாழ்த்துகள்


துர்வேஷ் சகாதேவன்
மே 10, 2025 18:57

இதற்கு கைமாறாக நாம் தம்பளர் பிஜேபி உடன் கூட்டு வைப்பார் இது நாள் வரை திரை மறைவு வாழ்வு இனி direct சப்போர்ட் தான்


ஆரூர் ரங்
மே 10, 2025 18:22

ட்ராக்டர் காலத்தில் ஏர், கலப்பைன்னு கொடுத்து கற்கால கட்சியாக்கிவிட்டார்கள்.


சமீபத்திய செய்தி