உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேச நலன் பாதுகாக்கப்படும்: மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தேச நலன் பாதுகாக்கப்படும்: மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள 25 சதவீத வரி விதிப்பு தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம். கடந்த சில மாதங்களாக இந்தியா - அமெரிக்கா இடையே நியாயமான, சமநிலையான மற்றும் இரு தரப்புக்கும் பயனளிக்கும் வகையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு நடைபெற்று வருகிறது. விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் சிறு, குறு தொழில்களின் நலனை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். சமீபத்தில் பிரிட்டனுடன் மேற்கொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உட்பட பிற ஒப்பந்தங்களிலும் நம் தேச நலனை பாதுகாக்கும் வகையில், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை