வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாகிஸ்தான் உடன் பேச்சு நடத்துவார்கள். தேர்தல் ஆணையரோடு அல்ல.
‘ஆன்லைன்’ மோசடி, ‘டீப் பேக்’ போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஓர் உலகளாவிய கட்டமைப்பு தேவை. இவை, மக்களை சென்றடையும் முன் தடுக்கும் வழிமுறைகளை அரசு மற்றும் தனியார் துறைகள் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும். வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், ஆன்லைன் மோசடிகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் வலுப்படுத்துவது அவசியம்.- நரேந்திர மோடிபிரதமர்
நம் நாட்டில், 5ஜி பயனர்களின் எண்ணிக்கையை, வரும் 2030ம் ஆண்டுக்குள் 55 கோடியில் இருந்து 100 கோடியாக இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 4ஜி தொழில்நுட்பத்தில் உலக நாடுகளைவிடப் பின்தங்கியிருந்த இந்தியா, 6ஜி தொழில்நுட்பத்தில் உலகிற்குத் தலைமை தாங்க உறுதியுடன் உள்ளது.- ஜோதிராதித்ய சிந்தியாமத்திய அமைச்சர், பா.ஜ.,
அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஒவ்வொரு கட்சிக்கும் ஜனநாயக உரிமை உண்டு; ஆனால், தேர்தல் கமிஷன் விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தீர்வு காணாமல், குழப்பத்தை உருவாக்க விரும்புகின்றன. தினமும் போராட்டங்களை நடத்துவதற்கு பதிலாக, தேர்தல் கமிஷனுடன் அக்கட்சியினர் பேச்சு நடத்த வேண்டும்.- சிராக் பஸ்வான், தலைவர், லோக் ஜனசக்தி – ராம் விலாஸ் பிரிவு
பாகிஸ்தான் உடன் பேச்சு நடத்துவார்கள். தேர்தல் ஆணையரோடு அல்ல.