தேசியம் பேட்டி
வறுமை ஒழிந்து விடுமா?புனித நீராடுவதால், நாட்டில் வறுமை ஒழிந்து விடுமா? இதனால் என்ன ஆகப் போகிறது? நான் யாருடைய நம்பிக்கையையும் கேள்வி கேட்கவில்லை. 'போட்டோ ஷூட்' எடுப்பதற்காக, பா.ஜ., தலைவர்கள் போலியாக கங்கையில் நீராடுகின்றனர்.மல்லிகார்ஜுன கார்கேதேசிய தலைவர், காங்.,கார்கே மன்னிப்பு கேட்கணும்!சனாதன தர்மத்தை அவமதிக்கும் வகையில் கார்கே கருத்து தெரிவித்துள்ளார்; இது, வெட்கக்கேடானது. ஹிந்துக்களின் மத நம்பிக்கையை கிண்டல்அடித்துள்ளார். இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஹிந்து மதத்தை தவிர, வேறு எந்த மதத்தினரையாவது, அவரால் இப்படி விமர்சிக்க முடியுமா?சம்பித் பாத்ராலோக்சபா எம்.பி., - பா.ஜ., காங்., முறியடிக்கும்!நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு முயற்சிக்கிறது. இதற்காக திரைமறைவில் வேலைகள் நடக்கின்றன. அரசியலமைப்பை மாற்ற துடிக்கும் பா.ஜ.,வின் முயற்சிகளை, முழு பலத்துடன் காங்., முறியடிக்கும்.ரேவந்த் ரெட்டிதெலுங்கானா முதல்வர், காங்கிரஸ்