உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  தேசியம் பேட்டி

 தேசியம் பேட்டி

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சட்டவிரோத குடியேற்றம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும். ஏழைகளுக்கான சேவைகளை கொள்ளையடிக்க, இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. சிலர், ஓட்டு வங்கிக்காக அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கின்றனர். நரேந்திர மோடி பிரதமர்

'பிக் பாஸ்' விளையாட்டா?

பா.ஜ.,வின் தலைவராக நிதின் நபினை அறிவித்த பின், தேர்தல் நடைபெறும் என அக்கட்சி கூறியது. ஆனால், தேர்தல் எதுவும் நடத்தவில்லை. கட்சி விவகாரங்களில் நபின், தன் பாஸ் என பிரதமர் மோடி கூறுகிறார். ஒரு சிலர், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை பாஸ் என்கின்றனர். இவர்கள், பிக் பாஸ் விளையாடுகின்றனரா? பவன் கெரா செய்தித் தொடர்பாளர், காங்.,

சிறந்த முதலீட்டு தலம்!

ஆந்திராவை விட சிறந்த முதலீட்டுத் தலம் வேறு இல்லை. பல துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் கொள்கை இருப்பதால், தொழிலதிபர்களுக்கு மிகப்பெரிய சந்தையாக மாறும். 2047க்குள் இந்தியா, உலக வல்லரசாக உயரும்; இப்பயணத்தில் ஆந்திரா முக்கிய பங்கு வகிக்கும். சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

srinivasan
ஜன 21, 2026 10:24

பாஜகவும் ஆர் எஸ் எஸ் ம் தனி ஆகையால் அவர்கள் ஒவ்வொரு தலைவராக தேர்ந்தெடுக்கிறார்கள். காங்கிரஸ் எப்போதும் சோனியா குடும்பத்தை தான் சுற்றி வருகிறது.


புதிய வீடியோ