தேசியம் பேட்டி
காலம் மாறிப்போச்சு! பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகள் குறிவைத்தது 26 பேரை மட்டுமல்ல; நம் அனைவரையும் தான். 'ஆப்பரேஷன் சிந்துார்' மூலம் மத்திய அரசு, அவர்களுக்கு பதிலடி அளித்தது. முன்பு, பயங்கரவாத தாக்குதல் நடந்தால் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவோம். இப்போது காலம் மாறிவிட்டது. நம்மிடம் பிரம்மோஸ் ஏவுகணை உள்ளது. ராஜேந்திர அர்லேகர் கேரள கவர்னர்மனிதத்தன்மையற்ற செயல்! மஹா., துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கோர விபத்தில் இறந்த சில நாட்களுக்குள், தேசியவாத காங்கிரசின் அடுத்த தலைவர் யார் என்ற பிரச்னை எழுந்துள்ளது. இது, மனிதத்தன்மையற்ற செயல். அக்கட்சி, தன் தலைவரை இழந்துள்ளது. ஒரு பெண், தன் கணவரை இழந்துள்ளார். அவரது கண்கள் இன்னும் கலங்கி நிற்கின்றன. சஞ்சய் ராவத் ராஜ்யசபா எம்.பி., சிவசேனா உத்தவ் பிரிவுஓய்வெடுக்கும் தலைவர்! படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்வில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பங்கேற்கவில்லை. துணை ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாக்கள், சுதந்திர தின கொண்டாட்டம் ஆகியவற்றிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. நாட்டிற்கு நல்ல எதிர்க்கட்சி தலைவர் தேவையே தவிர, ஓய்வெடுக்கும் தலைவர் அல்ல. ஜெய்வீர் ஷெர்கில் செய்தித்தொடர்பாளர், பா.ஜ.,