உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலியவாதி அல்ல!

ராகுலியவாதி அல்ல!

நேருவின் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டேன். ராஜிவ் உடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ராகுல் என்னை விட, 30 வயது இளையவர். அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் நான், 'ராகுலியவாதி' அல்ல. மாற்றுக் கருத்தை கூட ஏற்க முடியாத கட்சி அழிந்துவிடும். மணிசங்கர் அய்யர் மூத்த தலைவர், காங்.,

பாகுபாடு இருக்கக்கூடாது!

ரம்ஜான் மாதத்தில், இஸ்லாமிய அரசு ஊழியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே அலுவலகத்தில் இருந்து புறப்பட தெலுங்கானா காங்., அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஹிந்து பண்டிகைகளின் போது இது போன்ற சலுகைகள் வழங்கப்படுவதில்லை. இந்த பாகுபாடு இருக்கக்கூடாது. என்.வி.சுபாஷ் செய்தித் தொடர்பாளர், தெலுங்கானா பா.ஜ.,

முக்கியமற்றவர்கள்!

மாற்று கட்சியில் இருந்து பா.ஜ.,வில் சேர்பவர்கள், முக்கியமற்றவர்களாக மாறி விடுகின்றனர். சர்பானந்த சோனோவால் போன்றோரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். பா.ஜ.,வில் சேரவுள்ள பூபன் போராவுக்கும் இதே நிலை தான் ஏற்படும். அவரது இந்த முடிவால் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கவுரவ் கோகோய் லோக்சபா எதிர்க்கட்சித் துணைத் தலைவர், காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி