உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பொறுப்பற்ற செயல்!

 பொறுப்பற்ற செயல்!

வெளி நா டுகளுக்கு செல்லாதீர்கள், தங்கம் வாங்காதீர்கள் என, பிரதமர் மோடி கூறியது அறிவுரை அல்ல. இது, அவரது தோல்விக்கான ஆதாரங்கள். நாட்டின் நலனில் சமரசம் செய்துள்ள அவருக்கு, இனி நாட்டை வழிநடத்த தகுதி இல்லை. அவசரகால திட்டங்களை உருவாக்காமல், மக்களை துன்பத்திற்கு ஆளாக்குவது பொறுப்பற்ற செயல். ராகுல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்

சண்டை நடக்கிறது!

கேரளாவில் காங்., அமோக வெற்றி பெற்றும், முதல்வரை இதுவரை தேர்வு செய்யவில்லை. முதல்வர் பதவிக்காக அக்கட்சியில் சண்டை நடக்கிறது. மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல், முதல்வர் பதவிக்காக காங்., தலைவர்கள் அலைகின்றனர். காங்கிரசுக்கு ஓட்டளித்ததற்காக தற்போது மக்கள் வருத்தப்படுகின்றனர். வி.முரளீதரன் மூத்த தலைவர், பா.ஜ.,

இந்த நிலை வந்திருக்காது!

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், காங்கிரசுடன் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., கூட்டணி வைத்திருந்தால், அவருக்கு இந்த இக்கட்டான நிலை வந்திருக்காது. பா.ஜ.,வை வீழ்த்தும் ஆற்றல் காங்கிரசுக்கு மட்டுமே உள்ளது. பிராந்தியக் கட்சிகளால் அதை செய்ய முடியாது. பிரமோத் திவாரி ராஜ்யசபா எம்.பி., காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !