மேலும் செய்திகள்
தேச நலனே முக்கியம் மோடிக்கு சரத் பவார் ஆதரவு
21-May-2026
மேற்காசிய நாடான ஓமனின் கடற்பகுதியில் வர்த்தக கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இது தொடர்பாக நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பயன்படுத்திய வார்த்தை மென்மையான கண்டனத்தை மட்டுமே தெரிவித்துள்ளது. பவன் கெரா மூத்த தலைவர், காங்கிரஸ்கூட்டணியில் சேரலாம்! காங்கிரசுடன் தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் பிரிவு இணையப் போவதாக யூகங்கள் கிளம்பியுள்ளன. தற்போது காங்கிரஸ் வலுவிழந்து உள்ளதால் அக்கட்சியுடன் இணைவதை தவிர்த்து பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சரத் பவார் சேரலாம். அதிலும் பிரச்னை இருந்தால் சரத் பவார் தன் கட்சியை எங்கள் கட்சியுடன் இணைக்கலாம். ராமதாஸ் அதவாலே மத்திய அமைச்சர், இந்திய குடியரசு கட்சிசரிவுக்கு காரணம்! கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சரிவுக்கும், சட்டசபை தேர்தல் தோல்விக்கும் காரணத்தை ஆராயாமல், காங்கிரசின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீது மார்க்., கம்யூ.,வின் பினராயி விஜயன் குற்றம்சாட்டுகிறார். கேரளா தவிர பிற மாநிலங்களில் காங்., மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தான் அக்கட்சி நிலைத்திருக்கிறது. வேணுகோபால் பொதுச் செயலர், காங்கிரஸ்
21-May-2026