உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கலாசார மையத்தில் நவராத்திரி விழா

கலாசார மையத்தில் நவராத்திரி விழா

புதுடில்லி:ராமகிருஷ்ணபுரம் காஞ்சி காமகோடி கலாசார மையத்தில், நவராத்திரி விழா விக்னேஸ்வர பூஜையுடன் 3ம் தேதி துவங்கியது. மஹா சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம் செய்யப்பட்டது. பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஒன்பது நாட்கள் நடந்த விழாவில் மஹாபலேஷ்வர் பட் தலைமையில் அவஹந்தி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீ மகாவிஷ்ணு ஹோமம், ஸ்ரீ நரசிம்ம மூல மந்திர ஹோமம், சுப்ரமணிய ஹோமம், நாமத்ரேயா ஜபம் மற்றும் ஹோமம், சூரிய மந்திர ஹோமம், தாரண சரஸ்வதி ஹோமம், மேதா தட்சிணாமூர்த்தி ஹோமம், லலிதா சஹஸ்ரநாம ஹோமம், சூர்ய நமஸ்காரம் மற்றும் ஏகாதசி ருத்ர பாராயணம் நடத்தப்பட்டன. தினமும் மாலையில் நாட்டியம், கர்நாடக இசைக் கச்சேரிகள் மற்றும் பஜனை உள்ளிட்டவை நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை