உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் என்கவுன்டர் நக்சல் பலி; 2 வீரர் காயம்

சத்தீஸ்கரில் என்கவுன்டர் நக்சல் பலி; 2 வீரர் காயம்

பிஜப்பூர்,: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சல் ஒருவர் உயிரிழந்தார். சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்களூர் அருகேயுள்ள முங்கா வனப்பகுதியில், மாவோயிஸ்ட் குழு உறுப்பினர் தினேஷ் மோடியம், நக்சல்களின் இரண்டாம் கட்ட தளபதி வெள்ளா ஆகியோர் முகாமிட்டிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட ரிசர்வ் போலீஸ் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினர் மீது நக்சல்கள் வெடிகுண்டுகளை வீசினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில், நக்சல் ஒருவர் உயிரிழந்தார். இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில், பாதுகாப்பு படையினர் இருவர் காயம் அடைந்தனர்.இதையடுத்து, துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது. தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சல் சடலம் மீட்கப்பட்டது. இது தவிர, நக்சல்கள் பயன்படுத்திய துப்பாக்கி, வெடிகுண்டு மற்றும் அதை இயக்கும் ரிமோட் சுவிட்ச் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை