உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டங்ஸ்டன் கனிம சுரங்கம் ஏலம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

டங்ஸ்டன் கனிம சுரங்கம் ஏலம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி: மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

தீர்மானம்

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பா.ஜ., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tt1xftwj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.,வின் மாநில தலைவர் அண்ணாமலை, கண்டிப்பாக டங்ஸ்டன் சுரங்கம் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாக கூறினார். இதன் ஒரு பகுதியாக, டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்குழுவினருடன் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் டில்லி சென்றனர். நேற்று அவர்கள் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசினர். இன்று இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அண்ணாமலை கூறியிருந்தார்.

அறிவிப்பு

இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டியை மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் குழுவினர் டில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம வள பகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளமும், பல கலாசார பாரம்பரிய தளங்களும் உள்ளன என அவர்கள் மத்திய அமைச்சரிடம் தெரிவித்தனர்.சுரங்க அமைச்சகம் 2024 டிச.,24ல் வெளியிட்ட அறிக்கையில், ' டங்ஸ்டன் ஏல நடைமுறைக்கு பிறகு, அப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளம் உள்ளது என்ற அடிப்படையில் ஏலத்துக்கு எதிராக கருத்துகள் பெறப்பட்டு உள்ளன,' எனக்கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், ஜன.,22 அன்று நடந்த சந்திப்பின் போது, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்யுமாறு மத்திய அமைச்சரிடம் குழுவினர் கோரிக்கை விடுத்தனர். இக்குழுவினர் கோரிக்கைகளை பொறுமையாக கேட்டறிந்த மத்திய அமைச்சர் பல்லுயிர் பாரம்பரிய பாதுகாப்புக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார். விரிவான ஆலோசனைக்கு பிறகு, இப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையின் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்ய சுரங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மக்கள் கொண்டாட்டம்

ஏலம் ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரிட்டாப்பட்டி ,நாயக்கர்பட்டி உள்ளிட்ட பகுதி மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:நான் முதல்வராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது.இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு வாழ்த்து

அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன். இது மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கும். டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை எதிர்த்தும், இவ்விவகாரத்தில் மேலூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் விதமாக நான் சட்டமன்றத்தில் ஆதாரங்களுடன் விடியா திமுக-வின் கபட நாடகத்தை எடுத்துவைத்து பேசியதன் தொடர்ச்சியாக அதிமுக மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.தங்கள் உரிமைகளுக்காக, தொடர்ந்து போராடி வென்ற மேலூர் மக்களுக்கு எனது வாழ்த்துகள். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் இரட்டை வேட நாடகமாடி மக்களை ஏமாற்ற முயற்சித்த ஸ்டாலின் மாடல் திமுக அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலூர் மக்களின் போராட்டத்தை உணர்ந்து, அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்ததன் மூலம் மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.பா.ம.க., தலைவர் அன்புமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், இடதுசாரி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

தாமரை மலர்கிறது
ஜன 23, 2025 23:19

மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மதுரை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காது. கம்யூனிஸ்டாலின் அறைகூவல் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது.


naranam
ஜன 23, 2025 23:14

காப்பர் வேணாம் போடா! டங்ஸ்டன் வேணாம் போடா! வேலையும் வேணாம் போடா! இலவசம் தான் வேணும் தாடா,!


S. Venugopal
ஜன 23, 2025 22:57

தமிழகத்தில் 600 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன ஆனால் இன்ஜினியரிங் தொழிற்சாலைகள் வர எதிர்ப்பு கார் தயாரிக்கும் தொழிற்சாலைகளை விட கார் விற்கும் ஷோரூம்களே அதிகம்


sankaranarayanan
ஜன 23, 2025 21:14

டங்ஸ்டன் கனிம சுரங்கம் ஏலம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு இதைப்போய் ஒன்றிய அரசு அடிபணிந்துவிட்டது என்று கூறுவது அகம்பாவத்தின் உச்ச கட்டமாகும் ஜனநாயக ஆட்சியில் யாரும் யாருக்கும் அடிபணிய வேண்டாம். ஆனால் மத்திய அரசு என்று ஒன்று இருப்பதால் எல்லா மாநிலங்களும் அதற்கு ஆதரவும் ஒற்றுமையும் கொடுத்தால் தான் நாடு நாடக இருக்கும் இல்லையேல் அது நரகமாகிவிடும் எடுத்ததெற்கெல்லாம் எதிரும் புதிருமாக ஆட்சி செய்து கொண்டிருந்தால் நஷ்டம் நமக்குத்தான் வருந்துவது மக்கள்தான் ஆட்சியாளர்கள் அல்ல அல்ல அல்ல


Barakat Ali
ஜன 23, 2025 20:52

திட்டத்துக்கு அங்கீகாரம் கொடுக்கும் முன்பு மத்திய அரசு மாநில அரசுடன், தொழில் நுட்ப நிபுணர்களுடன் விவாதித்ததா ???? இல்லை .... அப்படி விவாதிக்க வேண்டும் என்று மாநில அரசு மத்திய அரசைக் கோரியதா ???? இல்லை .... துவக்கம் முதலே எதிர்ப்பு கிளம்பியும் மத்திய அரசு திட்டத்தைத் திணிக்க முயன்றதா ???? இல்லை ..... மாநில அரசு துவக்கம் முதலே எதிர்த்ததா ???? பிறகு மக்களுக்கு வெற்றி என எப்படிச் சொல்ல முடியும் ???? எப்படி மத்திய அரசுக்குத் தோல்வி என எப்படிச் சொல்ல முடியும் ????


S. Venugopal
ஜன 23, 2025 20:49

தமிழகத்தில் இதுபோல டாஸ்மாக் கடைகளையும் துரிதமாக மூடினால் நன்று.


Barakat Ali
ஜன 23, 2025 22:00

மாற்றுக் கட்சி ஆட்சியில் மூடும்படி போராடியவர்கள், ஆட்சியமைத்து மூன்றரை ஆண்டுகள் கழிந்த பிறகு உ பி யிலேயே இருக்கிறதே என்று எதிர்க்கேள்வி ....


vadivelu
ஜன 23, 2025 22:05

அதை சொல்லும் துணிவு உங்களுக்கு இருக்கா ? அப்பா முகநூலில் சொல்லுங்க


தமிழ்வேள்
ஜன 23, 2025 20:45

இனி தமிழகத்தில் எந்த ஒரு கனரக தொழிலும் வர வாய்ப்பு இல்லை.. தொழில் துவங்கும் முன்பே போராட்டம் செய்து எந்த தொழிலும் வராமல் பார்த்துக் கொள்ளும் திருட்டு திராவிடம்..போதை சாராயம் கட்டப்பஞ்சாயத்து அப்புறம் ஞானசேகரன் சார் சின்னவர் வகையறா தொழில்கள் மட்டுமே கன ஜோராக நடக்கும்...


Nagarajan S
ஜன 23, 2025 20:41

மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்தது அண்ணாமலையின் முயற்சியால் தான்.


Ganapathy
ஜன 23, 2025 20:27

நான் அந்தபகுதியில் பலகாலம் முன் இருந்து படித்து வந்தவன். அங்கு தொழிற்சாலைகளே இல்லை. அதனால் இளையசமூகம் முன்னேற எந்த வசதியும் இல்லை. பழம்பெரும் விஷயங்களை பாதுகாக்கவேண்டும் ஆனால் அதனால் முன்னேற்றம் பாதிக்கப்பட்டக் கூடாது. கையாலாகாத திருட்டுத்திராவிடிய அரசுக்கு கமிஷன் பற்றித்தான் கவலை. முன்னேற்றம் பற்றி கவலைப்படாததால் இன்று இந்தமுயற்சி கைவிடப்பட்டது. மனமிருந்தால் எகிப்தில் செய்தது போல சுற்றுலாவும் தொழில் முன்னேற்றமும் பாதிக்காதபடி இந்த அரசு வரி வாங்கும் மக்கள் நலனுக்காக பல யுக்திகளால் இதை செய்ய முடியும். ஆனால் இனவெறி சாதிவெறி இவற்றை தூண்டி அந்த பகுதிமக்களை ஏழைகளாக வச்சாத்தான் இவனுங்க பொழப்பு ஓடும்.


naadodi
ஜன 23, 2025 20:01

பழம் பெருமையைப் பற்றி மட்டும் பீத்திக்கொள்வதால் எந்த ஆதாயமும் இல்லை. 5000 வருஷம் முன்பு இரும்பு இருந்தது என்கிறார். அப்போ தனைத் தோண்ட எதிர்க்க விடியா அரசு இல்லை


புதிய வீடியோ