உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆடலாம், பாடலாம், ஆனால் இப்படி செய்யலாமா ? நெட்டிசன்கள் கலாய்ப்பில் சிக்கினார் சிங்கர் நேகா

ஆடலாம், பாடலாம், ஆனால் இப்படி செய்யலாமா ? நெட்டிசன்கள் கலாய்ப்பில் சிக்கினார் சிங்கர் நேகா

லக்னோ: பிரபல பெண் பாடகர் ஒருவர் வித்தியாசமான ஆடை அணிந்து உலா வந்தது பிரபலமாக பேசப்படுகிறது. சமூக வலைதளங்களில் பாடகியை வறுத்தெடுக்கின்றனர் நெட்டிசன்கள்.உபி மாநிலம் ரிஷிகேசை சேர்ந்தவர் நேகா கக்கர் (வயது 37). டி-சீரிஸ், சோனி மியூஸிக் இந்தியா, ஜி மியூஸிக் கம்பெனி உள்ளிட்ட பிரபல இசை நிறுவனங்கள் இவரது இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளன.இவர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் அவர் உள்ளாடையை வெளியே அணிந்தவாறு உலா வந்துள்ளார். வெள்ளை நிற பனியனும் அதற்கு மேல் புளூ கலர் பிராவும் அணிந்திருந்தார். இது போல் 2 டிராக் பேண்ட்டும் போட்டு கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது.இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பகிர்ந்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தில் 'என்ன இவர் சூப்பர் மேனா, இப்படியா காட்சி கொடுப்பது' என கலாய்த்து வருகின்றனர். இது என்ன உடை என ஒருவர் கேட்க அதற்கு பதில் அளித்துள்ள ஒருவர் , நேகா என்றைக்கு அர்த்தமுள்ளதாக நடந்து கொண்டார் என்றும் வினவி உள்ளனர். 'இவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கு தெரியும், அவர் எதையும் செய்வார், அவர் மேலே அணிந்திருப்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை' என பலரும் பலவாறு கருத்து தெரிவிக்கின்றனர்.' பாடலாம், ஆடலாம் , ஆனால் இப்படியா ? - ,பலர் சொல்ல முடியாத அளவிற்கு 'செக்ஸி' யாகவும் வர்ணித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தத்வமசி
ஜூலை 08, 2025 21:17

இப்படி அனைவரும் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காகவே இவர் இப்படி செய்துள்ளார். அவரது நோக்கம் நிறைவேறியது.


சண்முகம்
ஜூலை 08, 2025 18:49

இவர் எதையும் திறந்து காண்பிக்கவில்லை. பார்வையாளர்கள் எண்ணம் தவறாக சென்றால், அது பார்வையாளர் குற்றம்.


மூர்க்கன்
ஜூலை 08, 2025 17:10

வயதுக்கேற்ற அறிவு முதிர்ச்சி இல்லாமல் நடந்து கொள்வது?? பாடகியா?? இல்லை கருத்து தெரிவிக்கும் இவரை போன்றவர்களா? அவரது ஆடை அவரது சுதந்திரம்?? பிடிக்கவில்லையெனில் உங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுங்கள்.


Anantharaman Srinivasan
ஜூலை 08, 2025 15:08

ஆடலாம், பாடலாம், ஆனால் அவிழ்த்து காட்ட முடியுமா..? அதான் இப்படி அரைகுறை.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 08, 2025 14:33

பழைய்ய்ய காலத்து எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி படங்கள்ல பேண்ட்க்கு மேல ஜெட்டி போட்டு கையில பெரிய்ய்ய வாள் வச்சுக்கிட்டு சண்டை போடற மாதிரி காட்சிகள் இருக்கும் அதைப்பார்த்த கண்ணால இதையும் பார்த்துட்டு போய்க்கிட்டே இருக்கணும்.


அரவழகன்
ஜூலை 08, 2025 13:44

நடிகை என்றால் தாராளம் தாராளம் என்றால் அது நடிகை....கண்டு கழிச்சுட்டு போங்கப்பா..


N Srinivasan
ஜூலை 08, 2025 13:18

அன்று செஞ்சது இன்று நடந்து விட்டது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 08, 2025 13:02

வித்தியாசமான ட்ரஸ் சென்ஸ் - உடை அணியும் விதம் - என்று சொல்லலாம்... அநாகரிகம் என்றோ, ஆபாசம் என்றோ சொல்ல முடியாது.... எழுபதுகளில் தமிழ் சினிமா நாயகிகள் - திரையில் காட்டாத ஆபாசமா ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை