உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜின்னாவிடம் ஈவெரா சொன்னது என்ன? அம்பலப்படுத்தினார் மணி சங்கர் அய்யர்

ஜின்னாவிடம் ஈவெரா சொன்னது என்ன? அம்பலப்படுத்தினார் மணி சங்கர் அய்யர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''இந்துஸ்தான், பாகிஸ்தான் மற்றும் திராவிடஸ்தான் என்கிற வகையில், மூன்றாக இந்தியா பிரிக்கப்பட வேண்டும் என ஈவெரா, ஜின்னாவிடம் கூறினார்,'' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.ஹிமாச்சல பிரதேசத்தின் கவுசாலியில் குஷ்வந்த் சிங் இலக்கிய விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில், மணி சங்கர் அய்யர் பேசியதாவது: தமிழகம் பிற மாநிலங்களை போல அல்லாத ஒரு மாநிலம். அதனால் தான் நானோ, சிதம்பரமோ திராவிட கட்சிகளின் ஆதரவின்றி வெற்றி பெற முடியவில்லை. 1941ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி நான் பிறந்த நாளில், பத்திரிகைகளில் என்ன முக்கிய செய்தி வந்திருந்தது என்பதை பார்த்தேன். உலக அளவில் வந்த பிரதான செய்தியானது, ஹிட்லர் பெல்கிரேடு நகரை ஆக்கிரமித்தார் என்பதாகும். இந்திய அளவில் முக்கிய செய்தியானது, ஈவெரா சென்னை ரயில் நிலையத்தில் முகமது அலி ஜின்னாவை நேரில் சென்று வரவேற்றார் என்பது தான். ஏனெனில் முஸ்லிம் லீக்கின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அப்போது சென்னையில் நடந்தது.அதன் வரவேற்பு குழு தலைவர் என்ற முறையில் ஈவெரா ஜின்னாவை வரவேற்றார். அந்த மாநாட்டில் பேசிய ஈவெரா, ''நான் பாகிஸ்தான் கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் என்கிற உங்கள் கோரிக்கையை முழுவதுமாக ஏற்கிறேன். தயவு செய்து என்னுடைய கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தியா 3 ஆக பிரிக்கப்பட வேண்டும். இந்துஸ்தான், பாகிஸ்தான் மற்றும் திராவிடஸ்தான் என்கிற வகையில், 3 ஆக பிரிக்கப்பட வேண்டும் என்றார். இது தான் இப்போதைய விவகாரத்தின் பின்னணி. இந்த திராவிட சக்திகள் 100 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, வேறு ஒரு வித்தியாசமான இந்தியாவை உருவாக்க விரும்பினர். இவ்வாறு மணி சங்கர் அய்யர் பேசியுள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜிவ் பற்றி அந்த விழாவின் மற்றொரு நிகழ்வில் மணி சங்கர் பேசியதாவது:ராஜிவ் தேர்ந்தெடுத்த அரசியல் கொள்கைகளுக்கும், தற்போதுள்ள நிர்வாகத்தின் அரசியல் கொள்கைளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தற்போதைய அரசியல் கொள்கைகள், நம் நாட்டின் புவியியல் மற்றும் சமூக எல்லைகளை புறக்கணிக்கின்றன. இலங்கை சிதறுண்டால், இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படும் என்பதை ராஜிவ் உணர்ந்திருந்தார். இதனால், இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி வைக்கும் ஒப்பந்தத்தை அவர் ஏற்படுத்தினார். இலங்கை சிதறிவிடாமல் இருப்பதை தடுக்கவும், தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகள் தலைதுாக்காமல் இருக்கவும் இந்த நடவடிக்கையை ராஜிவ் எடுத்தார். இந்திய அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி வைத்தது, அந்நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தான்; ஆட்சியை கைப்பற்ற அல்ல. ஆனால், அந்த முடிவு தவறாக மாறியது. முக்கிய தமிழ் தலைவர்கள் மற்றும் போராளி குழுக்களை தவறாக எடை போட்டதால், அனைத்தும் தவறாகி போனது. எது மிக முக்கியம் என ராஜிவ் நினைத்தாரோ, அந்த விஷயமே அவரை அரசியல் ரீதியாக மிகப் பெரிய விலையை கொடுக்க வைத்தது. அதற்கு காரணம் நம் ராணுவமும், உளவுத்துறையும் அவரை கைவிட்டது தான். இவ்வாறு மணி சங்கர் அய்யர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 73 )

தாமரை மலர்கிறது
அக் 16, 2025 18:55

இது போன்ற ஆபத்தான கருத்துக்களால் தான், தமிழகத்தில் மூன்று மொழி கல்வி அவசியம். தென்னகத்தை தேசியத்தோடு ஒருங்கிணைக்க, முதலில் ஹிந்தி கட்டாயம் ஆக்கப்படவேண்டும். இரண்டாவது தமிழக அரசு வேலைகளில் ஹிந்தி தெரிந்திருந்தால், பத்து சதவீதம் கோட்டா கொடுக்க வேண்டும். மூன்றாவது பாலிவுட் படங்களுக்கு வரிச்சலுகை கொடுக்கவேண்டும். நான்காவது தமிழ்நாடு என்ற பெயரை தக்ஷிணப்ரதேஷ் என்று மாற்றவேண்டும்.


Vasu
அக் 16, 2025 18:45

மூளை இருக்க வேண்டிய இடத்தில வெறும் களிமண் இருந்தால் இப்படி தான் இருக்கும். மறுபடியும் தனி நாடு கேப்பாராம் இந்த வெட்டி பேர்வழி.


KOVAIKARAN
அக் 16, 2025 18:14

இந்த மணி சங்கர் அய்யர் வாயைத்திறந்தாலே அபத்தான பேச்சுக்கள்தான். ஈவேரா அவர்கள் 1941 ல் பேசியதை இப்போது ஏன் இவர் கிளறவேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் பெரியார் அவர்களைப்பற்றி திராவிடக்கட்சிகளை தவிர மற்றவர்கள் எல்லாம் நல்லதாகப் பேசுவதில்லை. இப்போது அவுல் மென்ற வாய்க்கு அரிசி கிடைத்தாற்போல மணி சங்கர் பழைய செய்திகளை எடுத்து விடுகிறார். இனி ஆளாளுக்கு பெரியாரைப்பற்றி அவர் 1941 லேயே இந்தியாவைப் பிரிக்க ஜின்னாவுடன் சேர்ந்து சதி செய்தார் என்று பலவாறு பேசுவார்கள். நடக்கட்டும் கச்சேரி.


panneer selvam
அக் 16, 2025 17:59

What Mani Shankar Iyer spoke about Periyar is true . Periyar did want separate country for British Rajathani Tamilnadu , Kerela minus Travancore , part of Karnataka and Andhra up to part of Orissa So truth , you may not like it , but it can not be erased .


Sun
அக் 16, 2025 17:36

மணிசங்கர் கூறிய படி திராவிடஸ்தான் தனிநாடு கோரிய பெரியார் புகழ் பாடும் தி.மு.க வுடன் தானே உங்கள் கட்சி கூட்டணியில் உள்ளது? அப்புறம் எதற்கு இப்ப இந்த மலரும் நினைவுகள் எல்லாம்?


Venugopal S
அக் 16, 2025 17:15

அன்றைய அரசியல் கள நிலவரம் தனி நாடு கோரிக்கையை திமுகவை ஆதரிக்கத் தூண்டியது. இன்றும் கூட மத்திய பாஜக அரசின் இதே பாரபட்சமான நடவடிக்கைகள் தொடர்ந்தால் திரும்பவும் அந்த கோரிக்கை உயிர் பெற வாய்ப்பு உள்ளது!


VenuKopal, S
அக் 16, 2025 18:55

கோ வாலு...எப்படி ஆரியன், வடக்கன் பார்பான் போன்ற காமெடி 100 வருஷமா வருதோ, அதே மாதிரி தனி திராவிடம் அப்டின்னு இன்னும் 2000 வருஷமா உருட்ட வேண்டியது தானே. ஒரு கூந்தலும் ஆகாது


SRIDHAAR.R
அக் 16, 2025 17:12

ஓட்டுக்காக மக்களுக்கு எதிராக பேசக்கூடாது திரு.மணி அவர்களே


M Ramachandran
அக் 16, 2025 16:03

திருட்டு திருடர்கள் எண்ணம் அம்பலமாகிறது.


M Ramachandran
அக் 16, 2025 16:02

இப்படி என்ன ஒருவர் ஓருவாராக


M Kumaran
அக் 16, 2025 15:53

இவர் ஒரு திராவிஷ சொம்பு பாகிஸ்தான் கை கூலி . காங்கிரஸ் கூட இவரை நம்பியதில்லை